செட்டி பல்குணா

இந்திய அரசியல்வாதி

செட்டி பல்குணா (Chetti Palguna) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அல்லூரி சீதாராம ராச்சூ மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியில் ஒய். எசு. ஆர். சி. பி. கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளரான தோனு தோரா சியாரியை 25,441 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பல்குணா முந்தைய விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அரக்கு மண்டலத்தில் உள்ள சீகரி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பக்கீரு என்பதாகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பல்குணா அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு வங்கி ஊழியராக இருந்தார்.[1] தனது தொகுதியில் ஒரு தொழில்துறை பூங்காவை அமைக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.[3]

தொழில் தொகு

பல்குணா 2014 ஆம் ஆண்டில் ஒய். எசு. ஆர் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். பொதுத் தேர்தலில் ஒய். எசு. ஆர் காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் கோத்தப்பள்ளி கீதையிடம் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டில், இவர் ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் அரக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2024 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.[5][6] ஆனால் இவரது மருமகள் கும்மா தாணுச்சா ராணி அரக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஒய். எசு. ஆர் காங்கிரசு கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.[7][8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "TDP wand fails to do the trick in Visakha Agency" (in en-IN). 2019-05-23. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/tdp-wand-fails-to-do-the-trick-in-visakha-agency/article27228779.ece. 
  2. "Araku Valley Election Results 2019 Live Updates: Chetti. Palguna of YSRCP Wins". News18 (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2024-03-22.
  3. Correspondent, Special (2019-06-07). "APIIC urged to set up industrial park in Araku" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/apiic-urged-to-set-up-industrial-park-in-araku/article27589044.ece. 
  4. "Vizag: Tribals turn scenic village into tourism destination". 2020-11-26. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/tribals-turn-scenic-village-into-tourism-destination/articleshow/79415941.cms. 
  5. Sudhir, S. N. V. "Andhra CM Jagan Mohan Reddy could face bumpy road after dropping MLAs from polls list". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-22.
  6. "Jagan drops 10 more MLAs ahead of upcoming elections". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-01-04. பார்க்கப்பட்ட நாள் 2024-03-22.
  7. Correspondent, D. C. (2024-03-17). "YSRC changes Araku MP candidate for second time". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-22.
  8. Rao, G. Janardhana (2024-03-18). "Andhra CM Jagan's YSRC withholds Anakapalle candidate, shuffles Araku nominee in strategic election move". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டி_பல்குணா&oldid=3914486" இலிருந்து மீள்விக்கப்பட்டது