செட்லட் தீவு

செட்லட் தீவு (Chetlat Island) என்பது இலட்சத்தீவுகளில் அமைந்துள்ள முருகைக்கற் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1] இலட்சத்தீவுகளில் அமைந்துள்ளதும் மக்கள் வசித்து வருவதுமான தீவுகளில் இதுவும் ஒன்றாகும்.

செட்லட்
ചെത്ലാത്
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்11°41′N 72°42′E / 11.683°N 72.700°E / 11.683; 72.700
பரப்பளவு1.14 km2 (0.44 sq mi)
நிர்வாகம்
India
ஒன்றியப் பகுதிஇலட்சத்தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை2545 (2009)

புவியியல்

தொகு

செட்லட் தீவானது கிட்லன் தீவில் இருந்து வடகிழக்காக 37 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மொத்த உலர் நிலப் பரப்பளவு 1.14 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

வரலாறு

தொகு

முற்காலத்தில் போர்த்துகேயக் கடற்பயணிகளினால் இங்கு வசித்து வந்த மக்கள் துன்புறுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.[2] இங்கு தும்பு உற்பத்தியே முக்கிய தொழிலாகக் காணப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hydrographic Description (Indian Ocean Pilot)
  2. "Chetlat" (PDF). Archived from the original (PDF) on 2011-11-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-15.
  3. R. H. Ellis, A short account of the Laccadive Islands and Minicoy, AES reprint 1992

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்லட்_தீவு&oldid=4180133" இலிருந்து மீள்விக்கப்பட்டது