செட் (மாதம்)
செட் மாதம்,(ஆங்கில மொழி: Chet, (பஞ்சாபி மொழி: ਚੇਤ) சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி முதலாவது மாதம். இம்மாதம் கிரகரிய நாட்காட்டியின் மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இது தமிழ் நாட்காட்டியின் பங்குனி மாதத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது. இம்மாதத்தின் முதல் நாள் சீக்கியர்களின் புத்தாண்டு ஆகும். மேலும் இந்த மாதத்திலேயே குரு கோவிந்த் சிங்கின் இரண்டாவது மகன் சாகிப்சாடா ஜுஜர் சிங் பிறந்தார்.
செட் மாதச் சிறப்பு நாட்கள்
தொகு- 1 சேட் (14 மார்ச்) - நானக்சாகி புத்தாண்டு.
- 1 சேட் (14 மார்ச்) - குரு ஹர் ராய் குருப்பட்டம் பெற்ற தினம்.
- 6 சேட் (19 மார்ச்) - குரு ஹர் கோவிந்தர் இறையுடன் கலந்த தினம்.
- 27 சேட் (9 ஏப்ரல்) - சாகிப்சாடா ஜுஜர் சிங்கின் பிறந்தநாள்.