செந்தில் கோபாலன்
செந்தில் கோபாலன் என்பவர் பயிர் என்னும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒரு தன்னார்வ அமைப்பின் நிறுவனர். பயிர் இவர் உருவாக்கிய அரசு சாரா சேவை அமைப்பு ஆகும். செந்தில் குமார் கோபாலன் ரோட்டரி கிளப் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா செயலாளர் வி இறையன்புவிடமிருந்து இருந்து 2006ல் இருந்து சான்று பெற்றுள்ளார்.
வாழ்க்கை
தொகுஇவர் இயந்திர பொறியாளர் ஆவார். செந்தில் பயிர் தொடங்குவதற்கு முன் மிச்சிகன், அமெரிக்கா லேசன் இன்க் அச்சு மற்றும் வெளியீடு பிரிவின் முழு புதிய வணிக முயற்சிகளுக்கான பொறுப்பான ஒரு தொழில்நுட்ப குழு மேலாண்மை இயக்குனராக இருந்துள்ளார். அவர் ஐபிஎம்,இந்தியா நிறுவனத்தின் மூலம் மும்பை அருகே உள்ள ஒரு உலகத்தரம் வாய்ந்த வர்த்தக அனல் மின் நிலையத்தில் பணியாற்றியுள்ளார்.[1]
முக்கிய பணி
தொகுபயிர் நிறுவனத்தின் முக்கிய இலக்கு அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரமும் மற்றும் முதன்மை கல்வியும் கொடுக்க வேண்டும். திருச்சி அருகே தெண்ணூர் என்னும் கிராமத்தில் பல நற்பணிகளை செய்து வருகிறார். [2] [3][4]. பயிர் மூலம் தமிழ்நாட்டின் மிக பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
உசாத்துணைகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
- ↑ http://rssairam.blogspot.in/2009/11/blog-post.html
- ↑ http://www.thehindu.com/features/metroplus/society/creating-changemakers/article3558820.ece
- ↑ http://in.news.yahoo.com/video/senthil-gopalan-man-courage-062004027.html
வெளியிணைப்புகள்
தொகு- பயிர் இனையதளம் பரணிடப்பட்டது 2014-01-09 at the வந்தவழி இயந்திரம்