செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது..[1][2] இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[3] இங்கு 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

செந்தோசா
செந்தோசாவின் சின்னம்
Sloganஆசியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டிடம் / சிங்கப்பூரின் கேளிக்கைத் தீவு / மகிழ்ச்சி அரசு
அமைவிடம்செந்தோசாத் தீவு
ஆள்கூறுகள்1°14′53″N 103°49′48″E / 1.248°N 103.830°E / 1.248; 103.830
கருப்பொருள்கனவுருப் புனைவு, துணிவுச் செயல்கள்
திறப்பு1972
செந்தோசா
பெயர் transcription(s)
 • சீனம்圣淘沙
 • பின்யின்ஷெங்தோஷா
 • மலாய்செந்தோசா
 • ஆங்கிலம்Sentosa
நாடுசிங்கப்பூர்

இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

மேற்சான்றுகள்

தொகு
  1. Apte, Vaman Shivaram. "The Practical Sanskrit-English Dictionary". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2011-08-15.
  2. Peter H Van Ness, Yoga as Spiritual but not Religious: A Pragmatic Perspective, American Journal of Theology & Philosophy, Vol. 20, No. 1 (January 1999), pages 15-30
  3. "Sentosa Annual Report 2012/2013". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தோசா&oldid=3910917" இலிருந்து மீள்விக்கப்பட்டது