மெர்லயன்
மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம். மேனாட்டு மரபுச்சின்னவியலில் இவ்விலங்குச் சின்னம் காணப்படுவது உண்டு.[1] சிங்கப்பூரின் நாட்டார் இலக்கியங்களிலோ, தொன்மங்களிலோ இவ்விலங்கு பற்றிய குறிப்புகள் கிடையா. எனினும் சிங்கப்பூரை விளம்பரம் செய்வதற்கான ஒரு அடையாளச் சின்னமாக இன்று இது பயன்பட்டு வருகிறது. முதன் முதலில் சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் அடையாளமாகவே இது பயன்பட்டது.[2]
பெயர்
தொகுமெர்லயன் என்பது கடற்சிங்கம் என்னும் பொருள் தரும் ஆங்கிலச் சொல். மெர் (=கடல்), லயன் (= சிங்கம்) என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. சிங்கப்பூரில் பெயர்ப்பலகைகளில் எல்லா மொழிகளிலும் இச்சொல் பயன்படுவதால் சிங்கப்பூரின் அடையாளமான கடற்சிங்கத்தைக் குறிக்க மெர்லயன் என்ற சொல்லே இக்கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் மெர்லயன்
தொகுஇதன் உடற்பகுதியாகிய மீன், இக்குடியிருப்பு ஒரு மீனவக் குடியிருப்பாகத் தொடங்கியதைக் குறிக்கப் பயன்படுகிறது. அக்காலத்தில் இக்குடியிருப்புக்கு தெமாசேக் என்னும் யாவா மொழிப் பெயர் வழங்கியது. சிங்கத்தலை அதன் முதற் பெயரான சிங்கபுரம் என்பதைக் குறிக்கிறது.
சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் பயன்பாட்டுக்காக, நினைவுக் குழுவின் உறுப்பினரும், வான் கிளீஃப் கடல்வாழிகள் காட்சியகத்தின் பொறுப்பாளருமான அலெக் பிரேசர்-புரூணர் என்பார் இச்சின்னத்தை வடிவமைத்தார். இது 26 மார்ச் 1964 இலிருந்து 1997 வரை பயன்பாட்டில் இருந்தது.[3] 1997ல் சிங்கப்பூர் சுற்றுலாச் சபை அதன் சின்னத்தை மாற்றிவிட்ட போதும், சுற்றுலாச் சபையின் சட்டம் அச்சின்னத்தைப் பாதுகாத்து வருகிறது. இதனால், அச் சின்னத்தைப் பயன்படுத்துவதற்குச் சுற்றுலாச் சபையின் அனுமதி பெறப்படவேண்டும். சுற்றுலாச் சபையின் அனுமதி பெற்ற நினைவுப் பொருட்களில் மெர்லயன் இடம்பெறுவதைக் காணலாம்.
குறிப்புகள்
தொகு- ↑ "The Monstrous Merlion: In the Original Sense". Public Art. Archived from the original on 10 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 September 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Singapore Infopedia An electronic encyclopedia on Singapore's history, culture, people and events
- ↑ "A new home for the Merlion". URA Skyline (July/August 2000) பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம். p. 6–8