மெர்லயன் பூங்கா
மெர்லயன் பூங்கா (Merlion Park) சிங்கப்பூரிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமும் சிங்கப்பூரின் ஒரு முக்கியமான அடையாளமும் ஆகும். சிங்கப்பூரின் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியான புல்லர்டனுக்கு அருகிலும் மத்திய வணிக மாவட்டத்திற்கு அருகிலும் இப்பூங்கா அமைந்துள்ளது. இந்த பார்க்க வேண்டிய சிங்கப்பூர் ஈர்ப்புப் பகுதி சிங்கப்பூர் வருவாய் மாவட்டத்தின் மையப் பகுதியான ராபிள்சு பிளேசு, எம்ஆர்டி நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய ஒரு குறுகிய தூரத்திலேயே உள்ளது. மெர்லயன் என்பது ஒரு சிங்கத்தின் தலையும் ஒரு மீனின் உடலும் கொண்ட ஒரு புராண உயிரினமாகும். சிலையின் தலைப்பகுதி சிங்கப்பூரின் அசல் பெயரான சிங்கப்புரா அல்லது சிங்க நகரம் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இது சிங்கப்பூரின் சின்னமாகவும் அந்நாட்டின் தேசிய உருவகமாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மெர்லயன் சிலைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. அசல் மெர்லையன் சிலையின் அமைப்பு 8.6 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தன் வாயிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இது பின்னர் ஒரு மெர்லயன் குட்டியுடன் அசல் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கக் குட்டி சிலை 2 மீட்டர் உயரம் கொண்டது.
வரலாறு
தொகுஅசல் மெர்லயன் பூங்காவை முதன்முதலில் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் 1964 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் சின்னமாக வடிவமைத்தது. 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் சிலைக்கான நிறுவல் விழாவில் இந்த பூங்கா அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் யூ அவர்கள் பூங்காவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்[1]. சிங்கப்பூர் ஆற்றின் முகப்பில் நிற்கும் மெர்லயன் சிலைதான் அசல் சிலையாகும். . இந்த மெர்லயன் சிலை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டடு பின்னர் 1972 ஆம் ஆண்ட்டு ஆகத்து மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மறைந்த சிங்கப்பூர் சிற்பி திரு லிம் நாங்செங்[2] மற்றும் அவரது எட்டு குழந்தைகள் இச்சிலையை வடிவமைத்தனர். இந்த மெர்லயன் சிற்பம் 8.6 மீட்டர் உயரமும் 70 டன் எடையும் கொண்டதாகும்[3][4].
மெர்லயன் இடமாற்றம்
தொகு1997 ஆம் ஆண்டில் 261 மீட்டர் நீளம் கொண்ட முற்றவெளி பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் அசல் மெர்லயன் பூங்காவின் இருப்பிடம் சிங்கப்பூர் ஆற்றின் நுழைவாயிலாக இல்லை, மேலும் சிலையை சிங்கப்புரின் மையப் பகுதியிலுள்ல மெரினா குடாவின் எல்லையிலிருந்து தெளிவாகக் காணவும் முடியவில்லை[3]. 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் மெர்லயன் சிலை புல்லர்டன் விடுதியை ஒட்டியுள்ள முற்றவெளி பாலத்தின் மறுபுறத்தில் சிறப்பாக கட்டப்பட்ட புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. .7.5 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று நிறைவடைந்தது[5].இதே ஆண்டு செப்டம்பர் 15 இல் அப்போதைய மூத்த மந்திரி லீ குவான் யூ மெர்லயனை அதன் புதிய இடமான தற்போதைய மெர்லியன் பூங்காவில் மீண்டும் வரவேற்றார். இது அசல் தளத்தை விட நான்கு மடங்கு பெரியதாகும்[6].
மெர்லியன் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளன்று மாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் மெர்லயன் சிலையை மின்னல் தாக்கியது. உடைந்த துண்டுகள் தரையில் விழுந்தபோது ஒரு வெடிச்சத்தமும் அதைத் தொடர்ந்து பெரும் சத்தமும் கேட்டதாக அருகிலிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்[7]. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்தன. மெர்லயன் சிலை 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 அன்று அதன் வாயிலிருந்து தண்ணீரை வெளியேற்றத் தொடங்கியது.
தொகுமறுசீரமைப்பு பணிகள்
தொகுமறுசீரமைப்பின் போது, மெர்லயன் சிலை முழு மறுசீரமைப்பு செயல்முறை முடியும்வரை முழுவதும் மூடப்பட்டது. . இந்த சிற்பம் நன்கு சுத்தம் செய்யப்பட்டது. , மேலும் மெர்லயன் பிரகாசமாகவும் சுத்தமாகவும் தோற்றமளிக்க மெர்லியன் மீது புதிய வண்ணப்பூச்சு பூசப்பட்டது. சிற்பத்தின் விரிசல் மற்றும் வெற்று பகுதிகளுக்கு அவ்ப்போது நிரப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
படக்காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Merlion Park". The Fullerton Heritage இம் மூலத்தில் இருந்து 1 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120801191701/http://thefullertonheritage.com/venues/merlion-park. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ "Sim Lian Huat". Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.
- ↑ 3.0 3.1 "A new home for the Merlion" (PDF). Skyline. No. July/August 2000. URA. pp. 6–8. Archived from the original (PDF) on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.
- ↑ "Singapore Infopedia: "Merlion Statue". Archived from the original on 7 செப்டெம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2008.
- ↑ "Merlion Park". Best Singapore guide இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120831102148/http://www.best-singapore-guide.com/merlion-park.html. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ "Merlion Park - VisitSingapore.com". VisitSingapore.com இம் மூலத்தில் இருந்து 16 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171016172747/http://www.visitsingapore.com/see-do-singapore/recreation-leisure/viewpoints/merlion-park/. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ "Merlion statue at Singapore River struck by lightning; suffers slight damage". Channel News Asia. 28 February 2009 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101113151126/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/412182/1/.html. பார்த்த நாள்: 18 September 2012.
புற இணைப்புகள்
தொகு- News Asia Singapore பரணிடப்பட்டது 2019-11-16 at the வந்தவழி இயந்திரம்
- Anniebees website