செந்நிற மர மூஞ்சூறு
செந்நிற மர மூஞ்சூறு Ruddy treeshrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | மர மூஞ்சூறு
|
குடும்பம்: | துபாலிடே
|
பேரினம்: | துபையா
|
இனம்: | து. இசுபிப்ளெண்டிடுலா
|
இருசொற் பெயரீடு | |
துபையா இசுபிப்ளெண்டிடுலா[2] | |
செந்நிற மர மூஞ்சூறு பரம்பல் |
செந்நிற மர மூஞ்சூறு (Ruddy treeshrew-துபையா இசுபிப்ளெண்டிடுலா) என்பது துபாயிடே குடும்பத்தில் உள்ள ஒரு மர மூஞ்சூறு சிற்றினமாகும்.[2] இது போர்னியோ, நட்டுனா தீவுகள் மற்றும் அனம்பாசு தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
வாழிடமும் அச்சுறுத்தல்களும்
தொகுஇந்தோனேசியாவின் காடுகளில் இந்தச் செந்நிற மர மூஞ்சூறு சிற்றினம் காணப்படுகின்றது. இது குறைந்த உயரத்தில் வாழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்குக் கீழ் உள்ளப் பகுதிகளில் மட்டுமே காணப்படும். தீவாய்ப்புக் கலவலை குறைந்த இனமாக அறிவிக்கப்பட்டாலும், மரங்கள் வெட்டுதல் போன்ற காரணங்களால், வாழிட இழப்பால் மேலும் அச்சுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இதன் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வருகிறது.[1]
துணையினங்கள்
தொகுசெந்நிற மர மூஞ்சூறு 5 துணையினங்களைக் கொண்டுள்ளது. இந்தோனேசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Cassola, F. (2016). "Tupaia splendidula". IUCN Red List of Threatened Species 2016: e.T41500A22279827. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41500A22279827.en. https://www.iucnredlist.org/species/41500/22279827. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 2.2 Helgen, K.M. (2005). "Tupaia splendidula". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 108. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.