செனான் ஆக்டாபுளோரைடு

வேதிச் சேர்மம்

செனான் ஆக்டாபுளோரைடு (Xenon octafluoride) XeF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கருத்தியல் ரீதியான ஓர் அனுமான சேர்மமாகும்.[1][2] 200 கிகா பாசுக்கல் அழுத்தத்தின் போதும் செனான் ஆக்டாபுளோரைடு நிலையற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[3]

செனான் ஆக்டாபுளோரைடு

தோராயமான வடிவவியல் கணக்கீடு மூலம் கணிக்கப்பட்டது
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாபுளோரோசெனான்
வேறு பெயர்கள்
செனான்(VIII) புளோரைடு
இனங்காட்டிகள்
17457-75-9
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Xe](F)(F)(F)(F)(F)(F)F
பண்புகள்
XeF8
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வரலாறு தொகு

1933 ஆம் ஆண்டில் மற்ற மந்த வாயு சேர்மங்களில் ஒன்றாக இலினசு பாலிங்கால் இதை கணித்தார். , ஆனால் மற்ற செனான் புளோரைடுகளைப் போலல்லாமல், எப்போதும் இதை தயாரிக்க இயலவில்லை.[4][5] செனான் அணுவைச் சுற்றியுள்ள புளோரின் அணுக்களின் கொள்ளிடத் தடையின் காரணமாக இச்சேர்மம் தோன்றுவதாக கருதப்படுகிறது. இருப்பினும், விஞ்ஞானிகள் இதை தயார் செய்ய முயற்சிக்கின்றனர்.[6]

தயாரிப்பு தொகு

செனான் ஆக்டாபுளோரைடின் உருவாக்கம் ஒரு வெப்பங்கொள் வினையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.:[7]

Xe + 4 F2 → XeF8

மேற்கோள்கள் தொகு

  1. Frlec, Boris; Holloway, John H.; Slivnik, Jože; Šmalc, Andrej; Volavšek, Bogdan; Zemljič, Anton (1 August 1970). "An examination of the possibility of the existence of xenon octafluoride" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 32 (8): 2521–2527. doi:10.1016/0022-1902(70)80296-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190270802962. பார்த்த நாள்: 31 March 2023. 
  2. Housecroft, Catherine E.; Sharpe, A. G. (2008) (in en). Index. Pearson Prentice Hall. பக். 1097. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-175553-6. https://books.google.com/books?id=3sy4ZAP4EGAC&dq=xenon+octafluoride&pg=PA1097. பார்த்த நாள்: 31 March 2023. 
  3. Luo, Dongbao; Lv, Jian; Peng, Feng; Wang, Yanchao; Yang, Guochun; Rahm, Martin; Ma, Yanming (2019). "A hypervalent and cubically coordinated molecular phase of IF 8 predicted at high pressure". Chemical Science 10 (8): 2543–2550. doi:10.1039/c8sc04635b. பப்மெட்:30881685. பப்மெட் சென்ட்ரல்:6385887. https://pubs.rsc.org/en//articlepdf/2019/sc/c8sc04635b. பார்த்த நாள்: 31 March 2023. 
  4. Weinstock, Bernard; Weaver, E. Eugene; Knop, Charles P. (December 1, 1966). "The Xenon-Fluorine System". Inorg. Chem. 66 (5): 2189. doi:10.1021/ic50046a026. https://pubs.acs.org/doi/10.1021/ic50046a026#. பார்த்த நாள்: 31 March 2023. 
  5. Pauling, Linus (May 1933). "The Formulas of Antimonic Acid and the Antimonates" (in en). Journal of the American Chemical Society 55 (5): 1895–1900. doi:10.1021/ja01332a016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01332a016. பார்த்த நாள்: 31 March 2023. 
  6. Cotton, F. Albert (17 September 2009) (in en). Progress in Inorganic Chemistry, Volume 6. John Wiley & Sons. பக். 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-16657-4. https://books.google.com/books?id=IhkQIoEGL24C&dq=xenon+octafluoride&pg=PA249. பார்த்த நாள்: 31 March 2023. 
  7. Holleman, A. F.; Wiberg, Egon; Wiberg, Nils (2001) (in en). Inorganic Chemistry. Academic Press. பக். 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-352651-9. https://books.google.com/books?id=Mtth5g59dEIC&dq=xenon+octafluoride&pg=PA394. பார்த்த நாள்: 31 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_ஆக்டாபுளோரைடு&oldid=3781822" இலிருந்து மீள்விக்கப்பட்டது