செனான் புளோரைடு நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

செனான் புளோரைடு நைட்ரேட்டு (Xenon fluoride nitrate) என்பது FXeONO2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். புளோரோசெனோனியம் நைட்ரேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

செனான் புளோரைடு நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
128970-72-9
InChI
  • InChI=1S/FNO3Xe/c1-6-5-2(3)4
    Key: YCLGDVQFVLWCLS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-][N+](=O)O[Xe]F
பண்புகள்
FNO3Xe
வாய்ப்பாட்டு எடை 212.30 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

செனான் புளோரைடு நைட்ரேட்டு கீழ்கண்ட வினையின் வழியாக உருவாகிறது:[3]

[FXeOXeFXeF][AsF6] + 2NO2F → FXeONO2 + NO2AsF6.

செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தின் சுத்திகரிப்பு பின்னர் சல்பியூரைல் குளோரைடு புளோரைடு கரைசலில் கரைப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது நைட்ரோனியம் ஆர்சனிக் அறுபுளோரைடை திடப்பொருளாக விட்டுச் செல்கிறது.[3]

செனான் இருபுளோரைடை 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் டைநைட்ரசன் டெட்ராக்சைடில் கரைத்தும் செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[3]

XeF2 + NO+ + NO3 → FXeONO2 + NOF

இம்முறையில் குறைந்த அளவு விளைபொருளே உருவாகும்.

திரவத்தில் அதிக நைட்ரேட்டு அயனி இல்லாததாலும் செனான் புளோரைடு நைட்ரேட்டு சிதைவதாலும் இந்த தயாரிப்பு முறை திறனற்றது.:[3]

செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தை தயாரிக்கப் பயன்படும் மற்றொரு முறை:[3]

XeF2 + HNO3 → FXeONO2 + HF

பண்புகள்

தொகு

செனான் புளோரைடு நைட்ரேட்டு வெண்மை நிறப் படிகமாகும்.[3] P21/c என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சுப் படிகமாக உருவாகிறது.[3] அலகு செல் மொத்தம் 386.6 Å3 கன அளவு கொண்ட நான்கு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. a = 4.6663 Å, b = 8.799 Å c = 9.415 Å என்ற அலகு செல் பரிமாணங்களுடன் செங்குத்தாக இல்லாத கோணம் β = 90.325° என்ற அளவுடன் மூலக்கூறு எடை 212.3 ஆகவும் படிக அடர்த்தி 3.648 ஆகவும் இதன் கட்டமைப்பு உள்ளது.[3] இந்த அளவுகள் -173 பாகை செல்சியசு வெப்பநிலையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும். கட்டமைப்பிலுள்ள Xe–F பிணைப்பின் நீளம் 1.992, Xe–O பிணைப்பின் நீளம் 2.126 Å, O–NO2 பிணைப்பின் நீளம் 1.36 Å, N–Oசிசு பிணைப்பின் நீளம் 1.199Å, N–Oமறுபக்கம் பிணைப்பின் நீளம் 1.224 Å ஆகவும் காணப்படுகின்றன.[3] F–Xe–O பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 177.6°, Xe-O-N பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 114.7° , (Xe)O–N–Oசிசு பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 114.5°, (Xe)O–N–O மறுபக்கம் பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 118.4, Oசிசு–N–Oமறுபக்கம் பிணைப்புகளின் கோணம் 127.1° ஆகவும் உள்ளன. செனான் அணுவில் உள்ள பிணைப்பு நீளம் மற்றும் கோணங்கள் FXeOSO2F மற்றும் FXeOTeF5 சேர்மங்களில் உள்ளதைப் போலவே இருக்கும். இது முனைவுற்ற ஆக்சிசன் பிணைப்பைக் குறிக்கிறது. Xe-O-N கோணமானது ஆலசன் நைட்ரேட்டுகளைக் காட்டிலும் பெரியதாகும். இது Xe-O பிணைப்பிற்கான குறைந்த பிணைப்பு அடர்த்தியைக் குறிக்கிறது. N-O ஒருபக்க பிணைப்பு நீளம் N-Oமறுபக்க பிணைப்பு நீளத்தை விட அதிகமாக உள்ளது. இது மற்ற ஆலசன் நைட்ரேட்டுகளுக்கு எதிரானதாகும்.

செனான் புளோரைடு நைட்ரேட்டு குறிப்பாக நிலைப்புத்தன்மையுடன் இல்லை. மெதுவாக -78 °செல்சியசு வெப்பநிலையில் இது உடைந்து XeF2·N2O4 சேர்மத்தை அளிக்கிறது. இது பல நாட்கள் கால அளவில் நடக்கும். 0 பாகை செல்சியசு வெப்பநிலையில், செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மமானது XeF2 ஆகச் சிதைகிறது. இதன் அரை ஆயுள் காலம் ஏழு மணிநேரமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Moran, Matthew D.; David S. Brock; Hélène P. A. Mercier; Gary J. Schrobilgen (2010). "Xe3OF3+, a Precursor to a Noble-Gas Nitrate; Syntheses and Structural Characterizations of FXeONO2, XeF2·HNO3, and XeF2·N2O4". Journal of the American Chemical Society 132 (39): 13823–13839. doi:10.1021/ja105618w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:20843046. 
  2. Atta-ur-Rahman (2006-01-01). Advances in Organic Synthesis: Modern Organofluorine Chemistry-Synthetic Aspects. Bentham Science Publishers. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781608051984. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Moran, Matthew D. (2007). Synthesis and Structural Characterization of new Xenon(II) Compounds and the Use of a Xenon(II) Cation as an Oxidant for the Preparation of Halogenated Hydrocarbons (PDF). McMaster University. pp. 42, 99–145. பார்க்கப்பட்ட நாள் 4 Oct 2014.