சென்னை கிறித்துவக் கல்லூரி

1837ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சென்னையில் செயல்படும் ஒரு கல்லூரி
(சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னைக் கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது.[1] இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றக் கல்லூரியாகும். இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.[2]

சென்னைக் கிறித்தவக் கல்லூரி
குறிக்கோளுரைIn Hoc Signo
இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்
வகைதனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம்
உருவாக்கம்1837
முதல்வர்முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன்
கல்வி பணியாளர்
220 (முழு நேரம்)
மாணவர்கள்8500
அமைவிடம், ,
வளாகம்புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர்
இணையதளம்mcc.edu.in

சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இவ்விடுதிகளை "இல்லம்" என அழைப்பர். சேலையூர் இல்லம், புனித தோமையார் இல்லம், பிஷப் ஹீபர் இல்லம், மார்ட்டின் இல்லம், மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியாக இயங்கி வருகிறது.

பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள்[3]

தொகு
  1. மறைமலையடிகள்
  2. பரிதிமாற் கலைஞர்
  3. சா. தர்மராசு சற்குணர்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hotbed of Student Protests". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
  2. "Best SCIENCE Colleges 2021: List of Top SCIENCE Colleges 2021 in India - Page3". https://www.indiatoday.in/bestcolleges/2021/ranks/1836832?page=3. 
  3. "100, and counting". 2 August 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-colleges-100-and-counting/article6273124.ece.