சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம்
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சென்னையில் மரினா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகங்களில் முதன்மையானதாகும். இராபர்ட் ்பெல்லோஸ் சிஷோம் என்ற 19ஆம் நூற்றாண்டு கட்டிட வடிவமைப்பாளரால் இந்தோ-சார்சனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் முன்னதாக செனட் மாளிகை என அறியப்பட்டு வந்தது. இங்கு தரைத்தளத்தில் அமைந்துள்ள மைய மண்டபம் 130 அடி நீளமும் 58 அடி அகலமும் 54 அடி உயரமும் உடையது. மண்டபத்தின் புறத்தே உள்ள தாழ்வாரங்கள் ஆறு வலிய கற்தூண்களால் இருபுறமும் தாங்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு இடையே உள்ள கல் வளைவுகளும் கட்டிடத்தின் நான்கு புறமும் எழுந்துள்ள கோபுரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள குவிமுக மாடங்களும் இக்கட்டிடத்திற்கு தனி மதிப்பை ஊட்டுவனவாக உள்ளன.
உசாத்துணை
தொகு- சென்னைப் பல்கலைக்கழக செனட் அவுஸ் பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம்