சென்னை உரத் தொழிற்சாலை

சென்னை உரத் தொழிற்சாலை (Madras Fertilizers Limited) நிறுவனம் இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையினைப் போன்றே இந்திய அரசால் அமெரிக்க நிறுவனமான அமோகோ நிறுவனத்துடனும், ஈரானிய எண்ணெய்க் கமொபெனியுடனும் கூட்டு முயற்சியால் 1966ஆம் வருடம் துவங்கப்பட்டது. இந்த ஆலை சென்னையில் மணலியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்குத் தேவையான மூலப் பொருளாகிய நாப்தா திரவம் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வழங்கப்படுகின்றது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் உரங்கள் அமோனியா, யூரியா, என்.பி.கே எனப்படும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் மற்றும் டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் ஆகியவையாகும். விஜய் எனபது இந்தப் பொருட்களின் வணிகப் பெயர் ஆகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_உரத்_தொழிற்சாலை&oldid=3245985" இலிருந்து மீள்விக்கப்பட்டது