சென்னை ஒப்பந்தம்
மதராஸ் ஒப்பந்தம் (Treaty of Madras) என்பது 1769 ஏப்ரல் 4 ஆம் நாள் மைசூர் அரசு மற்றும் பிரித்தானிய (லார்ட் வெரெல்ஸ்ட்) கிழக்கிந்திய நிறுவனத்துக்கு இடையே கையெழுத்தான ஒரு அமைதி ஒப்பந்தமாகும், இந்த ஒப்பந்தம் முதல் ஆங்கிலேய-மைசூர் போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1767 யில் இந்த சண்டை வெடிதது. ஐதர் அலியின் படைகள் ஒரு கட்டத்தில் மதராசை கைப்பற்றும் நிலைக்கு வந்துவிட்டன.
இந்த ஒப்பந்தத்தில் ஐதர் அலி மீது அவரது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவருக்கு ஆங்கிலேயர்கள் உதவ வேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. 1771 இல் மைசூர் மராட்டியர்களிடம் போருக்குச் சென்றபோது எந்த உதவியும் கிடைக்காதபோது இந்த ஒப்பந்தம் முறிந்ததாக ஐதர் உணர்ந்தார். ஒப்பந்தம் முறிந்து அதனால் எழுந்த நம்பிக்கை குறைவானது ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போர் வெடித்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். [1]
குறிப்புகள்
தொகு- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
மேலும் படிக்க
தொகு- Turnbull, Patrick. Warren Hastings. New English Library, 1975.