சென்னை தினம்

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்த புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்காக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர் இந்நாளிலேயே ஒரு சிறு காணியை வாங்கினர்

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


தோற்றம் தொகு

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.[3] முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

2014 தொகு

பல மாறுதல்களைக் கண்ட சென்னை, 22 ஆகஸ்டு 2014ல் தனது 375வது வயதைக் கொண்டாடியது.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.themadrasday.in
  2. "தினமலர் நாளிதழின் சென்னை தினச் சிறப்புப் பக்கம்". Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2011-08-17.
  3. "மெட்ராஸ் தினம்". பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2014.
  1. நம்ம Chennai டே பார்க்க https://www.youtube.com/watch?v=5r3ZFOxT1Mc

வெளி இணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_தினம்&oldid=3555862" இலிருந்து மீள்விக்கப்பட்டது