சென்னை யூத கல்லறை
யூத கல்லறை என்பது இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த வெளிநாட்டு (பரதேசி) யூதர்களுக்கான கல்லறை ஆகும். இது இலாயிட்சு சாலையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க யூத மக்கள் தொகை கொண்ட சென்னையின், ஒரே நினைவுச் சின்னமாக இந்த கல்லறை திகழ்கிறது. இது இப்போது கிட்டத்தட்ட அழிந்து விட்டது.[1] இங்குள்ள சுடுகாட்டில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வைர வியாபாரிகளின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளன. கல்லறையில் 30 க்கும் குறைவான கல்லறைகளே உள்ளன. இவற்றுள் சில கல்லறைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை.[2] மெரினா மீன் சந்தைக்கு மேற்கில் உள்ள சாலையின் ஒரு மோசமான சந்தைப் பகுதியில் இந்த கல்லறை அமைந்துள்ளது. பஹாய் நம்பிக்கை மற்றும் சீன கல்லறைகளுக்கு அருகில் உள்ளது.[3] கல்லறையில் முன்பு ஒரு இரும்பு வாயில் கதவு இருந்தது. அதில் ஒரு தகடு இணைக்கப்பட்டது. அதில் டேவிட் நட்சத்திரம் மற்றும் "யூத கல்லறை" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு, இந்தக் கதவுகள் நீக்கப்பட்டு உறுதியான கதவுகள் பொருத்தப்ப்பட்டன. புனரமைக்கப்படுவதற்கு முன்பு, மயானம் கடுமையான பழுதடைந்த நிலையில் இருந்தது. துருப்பிடித்த இரும்பு கதவுகள், ஓரளவு வளர்ந்த புதர்கள் மற்றும் விரிசல் சுவர்கள் என்று பழுதடைந்திருந்தது. மயானத்தின் இருப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் கவனிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு வரை, இது குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.[4]
வரலாறு
தொகு1500 முதல் யூத கல்லறையானது பவள வணிகர் தெரு, ஜார்ஜ் டவுன், மெட்ராசில், வாழ்ந்த ஆம்ஸ்டர்டாம் செபார்டிக் சமூகத்தால் கட்டப்பட்டது. பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசிய யூதர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர்.எனினும் ஜெப ஆலயமோ அல்லது யூத மக்களோ இன்று எஞ்சவில்லை.[5]
1644 ஆம்ஸ்டர்டாம் செபார்டிக் சமூகத்தைச் சேர்ந்த ஜாக் (ஜெய்ம்) டி பைவா (பாவியா) என்பவரால் பெத்தநாயக்கன்பேட்டையில் இரண்டாவது யூத கல்லறை கட்டப்பட்டது, இது பின்னர் மின்ட் தெருவின் தெற்கு முனையாக மாறியது,[6]
1687 ஜாக்யூஸ் (ஜெய்ம்) டி பைவா (பாவியா) 1687 ஆம் இறந்தவுடன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் [7][8]
1934 இரண்டாவது யூத கல்லறை உள்ளூர் அரசாங்கத்தால் ஓரளவு இடிக்கப்பட்டது. கல்லறைகள் மெட்ராஸின் மத்திய பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டன. கல்லறையின் வாயிலில் Beit ha-Haim (ஒரு யூத கல்லறைக்கான வழக்கமான பதவி, அதாவது "வாழ்க்கை வீடு. ") என்று எபிரேய மொழியில் எழுதப்பட்டது.[9]
5 ஜூன் 1968 உள்ளூர் அரசாங்கம் இரண்டாவது யூத கல்லறையை முழுவதுமாக இடித்து, அரசுப் பள்ளி கட்டுவதற்காக நிலத்தைக் கையகப்படுத்தியது, எனவே ரபி லெவி சாலமன் (மெட்ராஸ் ஜெப ஆலயத்தின் கடைசி ரபி) மாரடைப்பால் இறந்தார்.[10][11] மீதமுள்ள கல்லறைகள் காசிமேடு கல்லறைக்கு எதிரே நகர்த்தப்பட்டன.
29 டிசம்பர் 1983 சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, சென்னையின் சென்ட்ரல் பார்க் மற்றும் காசிமேடு கல்லறைக்கு எதிரே உள்ள கல்லறைக் கற்கள் லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டன.[12] இந்த முழு செயல்முறையிலும் 17 கல்லறைகள் காணாமல் போயின, ஜாக் (ஜெய்ம்) டி பைவா (பாவியா) .[13]
இந்தக் கல்லறை ஐசக் மற்றும் ரோசா அறக்கட்டளை, ஹென்ரிக்ஸ் டி காஸ்ட்ரோ குடும்பத்தின் பராமரிப்பில் உள்ளது.
2012 நிலம் சூறாவளியின் போது மயானத்தின் இரண்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. பழுதுபார்ப்பதற்கான செலவு $2070 ஆக இருக்கும்.[14]
2016 ஐசக் மற்றும் ரோசா அறக்கட்டளை, ஹென்ரிக்ஸ் டி காஸ்ட்ரோ குடும்பத்தினரால் கல்லறை புதுப்பிக்கப்பட்டது, மேலும் சுவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டன. அத்துமீறுபவர்கள் மற்றும் நாய் அச்சுறுத்தலைத் தவிர்க்க சுவர்கள் நீல வண்ணம் பூசப்பட்டு உயர்த்தப்பட்டன.[4]Roshne B (14 November 2016). "A cemetery buried in history". The New Indian Express.Roshne B (14 November 2016). "A cemetery buried in history". The New Indian Express.</ref>
படக்காட்சி
தொகு-
யிட்சாக் லெவியின் அடக்கம் பதிவு
-
சென்னையில் 1983 யூத கல்லறை மாற்றப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ "The city's fading link to its Jewish past - DTNext.in".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Chennai's link to its Jewish past, cemetery in Mylapore fading into oblivion - DTNext.in". Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
- ↑ "Kerala Jewish Sites". ISJM Jewish Heritage Report Volume II, numbers 3-4. International Survey of Jewish Monuments. December 1998. Archived from the original on 15 மே 2001. பார்க்கப்பட்ட நாள் 17 June 2017.
- ↑ 4.0 4.1 A cemetery buried in history Roshne B. The New Indian Express, 14 November 2016
- ↑ Muthiah, S. (2004). Lakshmi, C. S. (ed.). The Unhurried City: Writings on Chennai. Penguin Books India. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143030263. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
- ↑ "The last family of Pardesi Jews in Madras « Madras Musings | We Care for Madras that is Chennai".
- ↑ Muthiah S. (3 September 2007). "The Portuguese Jews of Madras". The Hindu.
- ↑ "The Portuguese Jewish Community Of Madras, India, In The Seventeenth Century". Sefarad.org. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ Arbell, Mordechai. "The Portuguese Jewish Community Of Madras, India, In The Seventeenth Century". Sefarad.org. Archived from the original on 26 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "18th century Jewish cemetery lies in shambles, craves for attention- The New Indian Express".
- ↑ "The Hindu : Will Chennai's Jews be there?". தி இந்து. Archived from the original on 12 March 2003.
- ↑ "18th century Jewish cemetery lies in shambles, craves for attention".
- ↑ Sampath, Janani (10 May 2016). "Chennai's link to its Jewish past, cemetery in Mylapore fading into oblivion". DT Next. Archived from the original on 27 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
- ↑ "Chennai". International Jewish Cemetery Project. International Association of Jewish Genealogical Societies. Archived from the original on 1 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)