செம்பியன்மாதேவி கைலாசநாதசுவாமி கோயில்

செம்பியன்மாதேவி கைலாசநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்குத் தென்கிழக்கில் தேவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

ஸ்ரீகைலாசம் என்றழைக்கப்படும் இக்கோயிலின் இறைவன் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி.[1]

வரலாறு தொகு

இக்கோயில் கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசியான செம்பியன்மாதேவியால் கட்டப்பட்டதாகும். அவருடைய திருமேனியும் இக்கோயிலில் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள மகாமண்டபம் செம்பியன்மாதேவி பெருமண்டபம் என்றழைக்கப்படுகிறது. 23 கல்வெட்டுகள் இதுவரை அறியப்பட்டுள்ளன. இரண்டு பெரிய திருச்சுற்றுக்களைக் கொண்ட இக்கோயிலில் குளம் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள் தொகு