செம்பூலா
செம்பூலா (Breynia vitis-idaea, officinal breynia) என்பது பல்லாண்டுவாழ்கின்ற மரமாகும். இது ஃபிலாந்தேசி ( ஆமணக்குக் குடும்பம் ) குடும்பம் ஆகும். இது இந்தியாவின் கிழக்கில் தைவான் மற்றும் ஒகினாவா வரையும், தெற்கில் இந்தோனேசியா வரையும் பரவியுள்ளது. இது 3 மீட்டர் உயரம் வரை எட்டக்கூடியதும், முட்டை வடிவ இலைகளைக் கொண்டதுமான புதர் அல்லது மரமாகும். இது கேசரமுள்ள பூக்கள் மற்றும் கோள வடிவ, சிவப்பு பழங்களைக் கொண்டிருக்கும்.
செம்பூலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Breynia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BreyniaB. vitis-idaea
|
இருசொற் பெயரீடு | |
Breynia vitis-idaea (Burm.f.) C.E.C.Fischer | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
சீனாவின் புஜியான் மற்றும் யப்பானின், இரியூக்கியூ தீவுகளில் உள்ள இலைப்பூ அந்துப்பூச்சி எபிசெபலா விட்டிசிடேயாவால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகிறது. இந்த அந்துப்பூச்சி இதன் பூக்களில் தீவிரமாக மகரந்தச் சேர்க்கை செய்கிறது, ஆனால் வெளிப்புற சூலக இலைச் சுவர் மற்றும் பூவுறையிதழ்களுக்கும் இடையில் முட்டை இடுகிறது. அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகள் மரத்தின் விதைகளின் உட்பகுதியை உட்கொண்டு, அதிலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுகின்றன.[2][3]
இதில் சபோனின் பிரைனின் மற்றும் டெர்பெனிக் மற்றும் பீனால் கிளைகோசைடுகள் உள்ளன . இது தைவானில் சி ஆர் யுன் என விற்பனை செய்யப்படுகிறது.
நச்சுத்தன்மை
தொகுBreynia vitis-idaea நச்சு ஹெபடோசெல்லுலர் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் April 3, 2014.
- ↑ Kawakita, A.; Kato, M. 2004.
- ↑ Zhang, J., Hu, B., Wang, S. & Li, H. (2012).