செம்மணி மனிதப் புதைகுழி
1998 ஆம் ஆண்டில், செம்மணியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக வன்கலவி மற்றும் படுகொலைகளுக்காக விசாரணையில் இருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அரச படையினரால் மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அங்கு சுமார் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[1]
1999 இல் பன்னாட்டளவில் கண்காணிக்கப்பட்ட அகழ்வாய்வில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் இரண்டு 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டது.[2] இந்த கண்டுபிடிப்புகளை அடுத்து ஏழு ராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை முதலில் கூறப்பட்ட எண்ணிக்கையை விட மிகக் குறைவு என்றும், மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்களால் முதலில் கூறப்பட்ட புதைகுழிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் புதைகுழிகள் சேதப்படுத்தப்பட்டதற்கான சான்று இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியது.[3] ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், விசாரணை முடிவடையாத நிலையில், செம்மணியில் மேலும் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.[4]
குற்றச்சாட்டுகள்
தொகுசூலை 1998 இல், இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார், குடாநாட்டில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.[5] ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விசாரணையை ஆரம்பித்தது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் உதவியைக் கோரியது. சூன் 1999 இல், ராஜபக்ச 1996 இல் காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இராஜபக்சவின் இணைப் பிரதிவாதிகளால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேலும் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வாய்வுகளை பன்னாட்டு மன்னிப்பு அவை உட்படப் பன்னாட்டுப் பார்வையாளர்கள் கண்காணித்தனர்.
விசாரணை
தொகு1999 திசம்பரில், அரசாங்க புலனாய்வாளர்கள் குழு ஒன்று, 10 எச்சங்களை அடையாளம் கண்டு, தாக்குதல் மற்றும் கொலைக்கான ஆதாரங்களைக் காட்டியது. மீதமுள்ள உடல்களுக்கு இறப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை.[6]
மேலும் பல உடல்கள் இருப்பதாக சோமரத்தின ராஜபக்சவும் மற்றவர்களும் குற்றம் சாட்டினர். "கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சோமரத்ன ராஜபக்ச மற்றும் ஏனையோரால் முதலில் கூறப்பட்ட புதைகுழிகள் எதுவும் இல்லை என்று "உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள்" ஒருமனதாக முடிவு எடுத்ததாக இலங்கை அரசாங்கம் கூறியது.[3]
உடல்களை அடையாளம் காணுதல் 2000 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.[7] 2000 மார்ச் மாதத்தில், ஏழு இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.[8] ஆனாலும், சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2004 வரை, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த வழக்கை "நிலுவையில் உள்ளதாக" விவரித்தது.[2] 2006 சனவரியில், மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணையை முடிக்க சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். கொழும்பு நீதிமன்றம் ஒன்று தாமதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியது.[4]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "'300 to 400 bodies have been buried'". TamilNet. 1998-07-06. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=7394/. பார்த்த நாள்: 2008-01-11.
- ↑ 2.0 2.1 U.S. Department of State(25 February 2004). "Country Reports on Human Rights Practices: Sri Lanka (2003)". செய்திக் குறிப்பு.
- ↑ 3.0 3.1 Official Web Site of the Government of Sri Lanka(21 December 1999). "No mass graves in Chemmani". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
- ↑ 4.0 4.1 "'No instructions on Chemmani' CID". BBC Sinhala. 4 January 2006. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/01/060104_chemmani_ag.shtml.
- ↑ Price, Susannah (29 April 1999). "South Asia Outrage over Sri Lankan 'mass grave'". BBC. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/331824.stm.
- ↑ U.S. Department of State(23 February 2000). "Country Reports on Human Rights Practices: Sri Lanka (1999)". செய்திக் குறிப்பு.
- ↑ Official Web Site of the Government of Sri Lanka(17 February 2000). "DNA tests for Chemmani graves' victims". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
- ↑ Official Web Site of the Government of Sri Lanka(6 March 2000). "Chemmani mass graves: CID to arrest 07 military persons". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)