செயங்கொண்ட சோழ கொங்காள்வான்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
செயங்கொண்ட சோழ கொங்காள்வான்[1][2][3][4] முதலாம் குலோத்துங்கன் ஆட்சி(கி.பி 1070 முதல் கி.பி 1125 வரை) காலத்தில் கொங்கு 24 நாட்டில் ஒன்றான வடகரை நாடு நாட்டை ஆட்சிபுரிந்தார் [சான்று தேவை]. இவருக்கு ஊராழ்வான் [சான்று தேவை]பொறுப்பும் பெற்று இருந்தார்.
கொடிவேரி அணைக்கட்டு
தொகுகொங்கு நாட்டில் ஒன்றான வடகரை நாட்டில் குளவாற்றூர் தற்போதைய ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் தாலுக்காவில் உள்ள கொடிவேரி என்ற இடத்தில் பவானி ஆற்றுநீரைத்தேக்கி (இக்குளம் அட்டி) கொடிவேரி அணைக்கட்டு கால்வாயை செயங்கொண்ட சோழ கொங்காள்வான் வெட்டினார்.[சான்று தேவை] முதலாம் குலோத்துங்கனின் 55 வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களைக் கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினார்.[சான்று தேவை] இன்று இது கொடிவேரி அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இந்த செய்தி கொடிவேரி , பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
கல்வெட்டு சான்று
தொகு- இந்த கொடிவேரி அணைக்கட்டு பற்றிய கல்வெட்டு அணைக்கட்டு கரையில் உள்ளது.[சான்று தேவை]
- ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்
- துங்க சோழதேவற்
- கு யாண்டு ஐம்பத்து அ
- ஞ்சாவது வடகரை நாட்டு
- க் குளவாற்றூரிலருக்கும்
- ஊராளி செம்ப வேட்டுவ
- ன் தொண்டயன் பிள்ளா
- நான சயங்கொண்டசோழ
- க் கொங்காள்வானேன் இக்குள
- ம் அட்டி
- காலும் வெட்டி
- விச்சேன் இது
- ஆக்குவான் பா
- தம் எந்தலைமேல்
- இது அழிப்பான் வழி
- அறுவான்
நீர்ப்பாசன கால்வாய்கள்
தொகு- கொடிவேரி அணையின் வடக்கு பக்கம் ஒரு கால்வாயும் தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் வெட்டினார்.[சான்று தேவை]
- கொடிவேரி அணையின் வடக்கு பகுதியில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கிறது ஏறக்குறைய 10 கி.மீ தொலைவு செல்கிறது. இந்த கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று பொதுமக்களால் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
- கொடிவேரி அணையின் தெற்கு பகுதியில் உள்ள மற்றோரு கால்வாய் கவுந்தப்பாடி மேட்டுப்பாளையம் வரை ஏறக்குறைய 15 கி.மீ செல்கிறது. இந்த கால்வாய் தட்டப்பள்ளி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
குறிப்புகள்
தொகு- ↑ "Kodiveri Dam built by Semba Vettuvan Jayangondasola-Kongalvan". Archaeological Survey of India. https://books.google.co.in/books?id=QQluAAAAMAAJ&q=kongalvan&dq=kongalvan&hl=en&sa=X&ved=0CCAQ6AEwAWoVChMImLiUkuLsxwIVUhqOCh3aUAF2.
- ↑ "கொடிவேரி அணையை கட்டி நீர்ப் பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்". தினமணி. http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/06/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA/article2843598.ece. பார்த்த நாள்: June 1, 2015.
- ↑ "கொடிவேரி அணையை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்.". தினகரன் இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 23, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923214838/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=460063&cat=504. பார்த்த நாள்: June 1, 2015.
- ↑ "கொடிவேரி அனை உருவான விதம்". நம்ம ஈரோடு. http://ourerode.com/?p=221. பார்த்த நாள்: July 03, 2016.[தொடர்பிழந்த இணைப்பு]