செயபாலன்

காமரூபத்தின் அரசன்

செயபாலன் (Jaya Pala) (1075-1100) காமரூப இராச்சியத்தின் காமரூப பால வம்சத்தின் (900-1100) ஆட்சியாளர் ஆவார். [1]

செயபாலன்
காமரூபத்தின் மன்னன்
அரசமரபுகாமரூப பாலவம்சம்

பிரம்ம பால வம்சத்தின் உறுப்பினரான செயபாலன் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காமரூபத்தை ஆட்சி செய்தார். இவர், கோயில் கட்டியதையும், தோட்டம் அமைத்ததையும், குளம் தோண்டியதையும் சிலின்பூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. துலாபாரம் பரிசளிப்பு விழாவையொட்டி, காமரூப மன்னன் செயபாலனிடமிருந்து 900 பொற்காசுகளையும் நிலச் சொத்துக்களையும் பரிசாகப் பெற்றுக் கொள்ள பிரகாசன் என்ற பிராமணன் மறுத்துவிட்டான் என்று கல்வெட்டு கூறுகிறது.

வங்காளக் கவிஞர் சந்தியாகர் நந்தி தனது இராமசரிதத்தில் காமரூப வெற்றிக்கு காரணம் கௌடாவின் பால மன்னன் இராமபாலன் (கி.பி. 1077-1133) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எழுதியுள்ளார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Choudhury, P. C, The History of Civilisation of the People of Assam to the Twelfth Century A.D
  2. Prakash, Col Ved, Encyclopedia of North-East India

மேலும் படிக்க

தொகு
  • Vasu, Nagendranath, The Social History of Kamarupa
  • Tripathi, Chandra Dhar, Kāmarūpa-Kaliṅga-Mithilā:a politico-cultural alignment in Eastern India : history, art, traditions, Indian Institute of Advanced Study
  • Wilt, Verne David, Kamarupa
  • Gorakhpuri, Raghupatisahaya, Kamarupa
  • Majumdar, Ramesh Chandra, Ancient India
  • Kapoor, Subodh, Encyclopaedia of ancient Indian geography
  • Sen, Sailendra Nath, Ancient Indian History and Civilization
  • Kapoor, Subodh, The Indian encyclopaedia: biographical, historical, religious,administrative, ethnological, commercial and scientific
  • Sarkar, Ichhimuddin, Aspects of historical geography of Prāgjyotiṣa-Kāmarūpa (ancient Assam)
  • Deka, Phani, The great Indian corridor in the east
  • Pathak, Guptajit, Assam's history and its graphics
  • Samiti, Kāmarūpa Anusandhāna, Readings in the history & culture of Assam
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயபாலன்&oldid=3822317" இலிருந்து மீள்விக்கப்பட்டது