சான்-டெனீ , ரீயூனியன்
சான்-டெனீ (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
சான்-டெனீ Saint-Denis | |
---|---|
நாடு | பிரான்சு |
Overseas region and department | ரீயூனியன் |
பெருநகரம் | சான் டெனீ |
Intercommunality | நார்த் து ல ரீயூனியன் (Nord de la Réunion - வடக்கு ரீயூனியன்) |
அரசு | |
• நகரமுதல்வர் (2014-2020) | கில்பர்ட் ஆனெட்டி (சோசலிசக் கட்சி) |
Area 1 | 142.79 km2 (55.13 sq mi) |
மக்கள்தொகை (2012) | 1,45,238 |
• அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+04:00 |
INSEE/அஞ்சற்குறியீடு | 97411 /97400 |
ஏற்றம் | 0–2,276 m (0–7,467 அடி) (avg. 23 m or 75 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "செயிண்ட் டெனிஸ் - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)