செயெடிட்டு

கட்டற்ற உரைத்தொகுப்பி

செயெடிட்டு (jEdit) என்ற கட்டற்ற உரைத்தொகுப்பிகளுள் ஒன்றாகும். இதன் மூலநிரற்தொகுப்புகள் குனூ பொதுமக்கள் உரிமத்தின் கீழ் உள்ளன. யாவா நிரல்மொழியில் இது எழுதப்பட்டுள்ளது அதன் முதன் ஆங்கில எழுத்தானj என்பதும், editor என்ற ஆங்கில சொல்லும் இணைக்கப்பட்டு, இதன் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது வின்டோசு, மாக், பிஎசுடி, லினக்சு போன்ற பல வகை இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது ஆகும். இதனை உருவாக்கும் திட்டப்பணி 1998 ஆம் ஆண்டு, சுலாவா பெசுடவு (Slava Pestov)என்பவரால் தொடங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.[4] 200 க்கும் மேற்பட்ட கோப்பு வடிவங்களையும், நிரல்மொழிக்கு ஒப்ப, அதனதன் ஒத்த உட்கூறுகளை வேறுபட்ட நிறங்களில் காட்டும் திறன் உடையதாகவும்(syntax highlighting) விளங்குகிறது.

செயெடிட்டு (jEdit)
வடிவமைப்புSlava Pestov
உருவாக்குனர்செயெடிட்டு திட்டப்பணி
தொடக்க வெளியீடு1998; 27 ஆண்டுகளுக்கு முன்னர் (1998)
அண்மை வெளியீடு5.4.0 / மார்ச்சு 18, 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-03-18)[1]
Preview வெளியீடு5.5pre1[2] / சூன் 13, 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-06-13)
மொழிஜாவா (நிரலாக்க மொழி)
இயக்கு முறைமைJava platform supporting[3]
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்GPL v2
இணையத்தளம்www.jedit.org

மேற்கோள்கள்

தொகு
  1. jEdit (March 18, 2017). "jEdit - Programmer's Text Editor - Developers' Page". பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
  2. jEdit (June 13, 2017). "jEdit - CHANGES.txt". பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
  3. jEdit (October 4, 2007). "Operating Systems and Java Versions". பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
  4. Slava Pestov. "Slava Pestov". பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
செயெடிட்டு-ஓர் அறிமுகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயெடிட்டு&oldid=4175514" இலிருந்து மீள்விக்கப்பட்டது