செய்திகளின் உண்மை சரிபார்ப்புக் குழு (தமிழ்நாடு அரசு)

தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக அனைத்து ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை கண்டுபிடித்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு 1 நவம்பர் 2023 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு குழுவாகும். இக்குழு பெற்ற உண்மைக்குப் புறம்பான தகவலை தன் வரம்பிற்குள் வருமா என்பதை உறுதிசெய்த பிறகு, அதன் மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதோடு, அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையிடம் ஆலோசனை செய்யும். இக்குழு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை[1]கீழ் இருப்பினும், தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் செயல்படும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் இயங்கும். இக்குழுவின் தலைவராக திட்டக் குழு இயக்குநர் பதவி உருவாக்கப்படுகிறது. திட்ட இயக்குநரின் கீழ் 80 பேர் பணிபுரிவர்.[2] இக்குழு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் செயல்படும்.[3][4]

மேற்கோள்கள்

தொகு