செரார் மூரு

செரார் ஆல்பர்ட் மூரு (Gérard Albert Mourou, பிரெஞ்சு மொழி: [ʒeʁaʁ muʁu]; பிறப்பு: சூன் 22, 1944) என்பவர் பிரெஞ்சு அறிவியலாளரும், மின்பொறியியல், சீரொளி ஆகிய துறைகளில் முன்னோடியும் ஆவார். குற்றொலித் துடிப்பு மிகையாக்கம் எனும் வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், டோனா இசுட்ரிக்லாண்ட் என்பவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் கண்டுபிடித்த வழிமுறை மூலம் உயர்ச் செறிவு (டெராவாட்டு) கொண்ட மீக்குறுஞ்சீரொளித் துடிப்புகள் உருவாக்கப் பயன்பட்டன.[1]

செரார் மூரு
Gérard Mourou
2015 இல் செரார் மூரு
பிறப்புசெரார் ஆல்பர்ட் மூரு
சூன் 22, 1944 (1944-06-22) (அகவை 80)
ஆல்பர்ட்வில், பிரான்சு
பணியிடங்கள்ஏக்கொல் பல்தொழில்நுட்பக் கழகம்
என்சுடா பார்சிருடெக்
இரோசெச்டர் பல்கலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுற்றொலித் துடிப்பு மிகையாக்கம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018)

மூரு பயன்முறை ஒளியியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளராக 2005 முத 2009 வரை பணியாற்றினார். ஏக்கோல் பல்தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுநிலைப் பேராசிரியராக உள்ளார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மீவேக ஒளியியல் அறிவியல் மையத்தின் முதலாவது பணிப்பாளராக இருந்தார். 1977 இல் இரோசெச்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது அவரும் அவரது மாணவரான டோனா இசுட்டிரிக்லாண்டும் தமது நோபல் பரிசு பெற்ற ஆய்வை மேற்கொண்டனர்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gérard Mourou Profile engin.umich.edu Retrieved 2 October 2018
  2. [Strickland, Donna T. (1988). "Development of an ultra-bright laser and an application to multi-photon ionization" (PDF). Laboratory for Laser Energetics. University of Rochester. Archived from the original (PDF) on 7 July 2013. Access date 2 October 2018]
  3. Murphy, Jessica (2 October 2018). "Donna Strickland: The 'laser jock' Nobel prize winner". BBC News. https://www.bbc.com/news/world-us-canada-45722890. பார்த்த நாள்: 2 October 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரார்_மூரு&oldid=3246202" இலிருந்து மீள்விக்கப்பட்டது