செரியூர் (Cheriyoor) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள தளிபரம்பாவில் குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

செரியூர் நதியில் ஒரு சிறிய படகு
செரியூர் வழிச்செல்லும் சாலை
செரியூரில் நெல் வயல்கள்

நிர்வாகம்

தொகு

செரியூர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டியேரி கிராமத்தின் (வார்டு எண். 4) ஒரு பகுதியாகும்.[1]

வரலாறு

தொகு

1845 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்து புகழ்பெற்ற மலையாள மொழி கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கேரள வர்மா வலிய கோயில் தம்புரானின் பூர்வீக ஊர் செரியூராகும். இவரது தந்தை நாராயணன் நம்பூதிரி செரியூரில் உள்ள முள்ளப்பள்ளி இல்லத்தில் உறுப்பினராக இருந்தார்.[2]

கோயில்கள்

தொகு

பழமையான தாலக்கோடு சிறீ கிருட்டிணர் கோயில், சிறீ புதிய குன்னில் புதிய பகவதி கோயில், சிறீ தர்ம சாசுதா மந்திரம் மற்றும் செரியூர் சும்மா பள்ளிவாசல் [3]ஆகியவை செரியூர் கிராமத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு மையங்களாகும்.

கல்வி

தொகு

செரியூர் அரசு உயர் தொடக்க நிலைப் பள்ளி 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும். இப்பள்ளி 2014 -ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

போக்குவரத்து

தொகு

தளிபரம்பா நகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 வழியாக செரியூர் -குட்டியேரி-வெள்ளாவு சாலை வழியாக அணுகலாம். மேலும் இச்சாலை வழியே கோவா மற்றும் மும்பை வரை பயணிக்க முடியும். இச்சாலையின் மறுபக்கம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் பயணிக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "LIST OF VILLAGES IN KANNUR DISTRICT". NATIONAL INFORMATICS CENTRE. NIC. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
  2. "Kerala Varma Valiya Koil Thampuran - Kalidasa Of Kerala | Haripad.in". Haripad, Alappuzha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  3. "Cheriyoor Juma masjid", www.onefivenine.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியூர்&oldid=4031589" இலிருந்து மீள்விக்கப்பட்டது