செருத்தாழம் குன்னின்மதிலகம் மகாதேவர் கோயில்
குன்னின்மதிலகம் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரள மாநிலம் கண்ணூரில் செருத்தாழம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பழைய பெயர் குன்னின்மதிலகம் சிவன் கோயில் என்பதாகும். இக்கோயிலின் மூலவரான சிவன் 'ஸ்ரீ குன்னின்மதிலகத்தப்பன்' என்று அழைக்கப்படுகிறார். அவர் காலையில் தட்சிணாமூர்த்தியாகவும், மதியம் கிராதகமூர்த்தியாகவும், மாலையில் உமாமகேஸ்வரராகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.[1]
வரலாறு
தொகுதிரேதா யுகத்தில், ராமரின் பக்திமிக்க, நம்பகமான தூதரான ஆஞ்சநேயரிடம், ராமேஸ்வரத்தில் மகாதேவரின் திருவுருவத்தை நிறுவும் பொறுப்பு ராமரால் ஒப்படைக்கப்பட்டது..அவர் செல்லும் வழியில், இந்தப் புனித பூமியில் மகாதேவரின் தெய்வ உருவத்தின் ஒரு பகுதியை நிறுவினார். அதன்காரணமாக அவர் ராமேஸ்வரத்தை அடையத் தாமதமானது. ஆஞ்சநேயரின் தாமதமான வருகையால், களிமண்ணால் செய்யப்பட்ட மகாதேவரின் திருவுருவத்தை ராமர் நிறுவி, மீதமுள்ள உயிர் சக்தியை தனுஷ்கோடியில் அமைந்துள்ள களிமண் கடவுளுக்கு அளித்தார்.
அபரிமிதமான ஆசீர்வாத சக்தியின் காரணமாகவும், நிலத்தின் முக்கியத்துவத்தின் காரணமாகவும், கடவுள்களும் துறவிகளும் இந்த இடத்தில் மகாதேவரின் தெய்வத்தை வணங்கினர். கலியுகத்தில், சுமார் ஆறு பிராமண குடும்பங்கள் இங்கு மகாதேவரின் மூலவர் சன்னதியைக் கட்டி, மூன்று வெவ்வேறு வடிவங்களில் கடவுளை வணங்கினர். நாளடைவில் அன்னிய படையெடுப்பின் காரணமாகவும், கவனிப்பாரின்றியும் கோயிலின் பல பகுதிகள் அழிந்துபோயின. 1980களில், கோயில் அறங்காவலர்களின் குடும்பத்தினரும் உள்ளூர் பக்தர்களும் கோயிலைப் புதுப்பிக்க ஆரம்பித்தனர்.
திருப்பணிகள்
தொகு2011 மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை கோயிலில் குறி கேட்கப்பட்டு, பல பரிகாரப் பணிகள் நடந்தன. பிறகு, குழு அமைக்கப்பட்டு, கோயிலின் பழமையைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மூலவர் சன்னதி, நமஸ்கார மண்டபம், கருவறையைச் சுற்றிய நாளம்பலம், விக்னேசர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, சரஸ்வதி மண்டபம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, நிறைவடைந்தன.