செருவிடை வீழ்தல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செருவிடை வீழ்தல் என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. இத் துறைப் பாடல்கள் புறநானூற்றில் இரண்டு உள்ளன. இவை நொச்சித் திணையின்பாற் பட்டவை.
இலக்கியம்
- வெறிபாடிய காமக் கண்ணியார் நொச்சிப் பூவை இரண்டு இடங்களில் பார்த்தாராம். ஒன்று தழையாடை செய்து மகளிர் உடுத்திக்கொண்டிருக்கும் காட்சி. மற்றொன்று மதில்போரில் நொச்சி சூடிப் போராடி வீழ்ந்துகிடக்கும் வீரர்களின் தலைக் குருதி தோய்த நிலையில் உணவு என ஏமாந்து பருந்து எடுத்துச் செல்லும் காட்சி. புறநானூறு 271
- மோசிசாத்தனார் நொச்சிப் பூவைப் பற்றிப் பாடுகிறார். நொச்சி அவருக்குக் ‘காதல் மரம்’. அவர் நாட்டு மகளிரின் இடையையும் அழகு செய்கிறதாம். மதிலைக் காக்கும் மறவனின் தலையையும் அழகு செய்கிறதாம். புறநானூறு 272
இலக்கணம்
- நொச்சித் திணை தொல்காப்பியத்தில் தனியே கூறப்படவில்லை. எனினும் உழிஞைத் திணையின் நிகழ்வாக “அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை” என வருகிறது.
- மதிலிலும், மிளை என்னும் காவல்காட்டிலும் போர் புரிந்து மாண்ட வேல்வீரனின் புகழ் பாடுவது ‘செருவிடை வீழ்தல்’ என்னும் துறையாகும் எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை 89