செர்பிய தினார்

செர்பிய தினார் (ஆங்கிலம்: Serbian Dinar; சின்னம்: РСД; குறியீடு: RSD) செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”.

செர்பிய தினார்
Cрпски динар / Srpski dinar (செர்பிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிRSD (எண்ணியல்: 941)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுРСД மற்றும் RSD
மதிப்பு
துணை அலகு
 1/100பாரா
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 20, 50, 100, 200, 500, 1000, 5000 தினார்.
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5, 10, 20 தினார்.
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)செர்பியா செர்பியா
வெளியீடு
நடுவண் வங்கிசெர்பிய தேசிய வங்கி
 இணையதளம்www.nbs.rs
அச்சடிப்பவர்வங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
 இணையதளம்www.nbs.rs/export/internet/english/zin
காசாலைவங்கித்தாள் மற்றும் நாணய உருவாக்கு நிறுவனம் (டாப்சிடர்)
 இணையதளம்www.nbs.rs/export/internet/english/zin
மதிப்பீடு
பணவீக்கம்5,1%
 ஆதாரம்[1], ஜூலை 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பிய_தினார்&oldid=3679466" இலிருந்து மீள்விக்கப்பட்டது