செர்மான் அலி அகமது
இந்திய அரசியல்வாதி
செர்மான் அலி அகமது (Sherman Ali Ahmed) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார்.[1][2] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்பர் தொகுதியில் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு இதே தொகுதியில் இருந்து இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] 2022 ஆம் ஆண்டில் கற்பழிப்பு பற்றி தொலைக்காட்சியில் இவர் தெரிவித்த கருத்துகள் குறித்து பெண்ணிய ஆர்வலர் சுமித்ரா அசாரிகா இவர் மீது முதல் தகவல் அறிக்கையை உருவாக்கினார்.[7]
செர்மான் அலி அகமது Sherman Ali Ahmed | |
---|---|
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2011 | |
முன்னையவர் | தில்தர் இரெசா |
தொகுதி | பாக்பார் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பார்பீட்டா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பார்பேட்டா, அசாம் |
முன்னாள் கல்லூரி | காட்டன் கல்லூரி,கிழக்கு வனப் பாதுகாவலர் கல்லூரி, இளநிலை, வனவியல் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sherman Ali Ahmed Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Sherman Ali Ahmed is an Indian National Congress candidate Baghbar". News18. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Assam Assembly Election Candidate Sherman Ali Ahmed". NDTV. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "2016 Winner Sherman Ali Ahmed". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Baghbar Assam Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Baghbar Assembly Constituency". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Assam: FIR Against Sherman Ali For Alleged 'Rape' Remark" (in en). Pratidin Time. 11 February 2022. https://www.pratidintime.com/latest-assam-news-breaking-news-assam/assam-fir-against-sherman-ali-for-alleged-rape-remarks.