செலீனைட்டு

செலீனியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்த ஓர் எதிர்மின் அயனி

செலீனைட்டு (Selenite) SeO2−3 என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். செலீனியத்தின் ஆக்சி எதிர்மின் அயனியாக இது கருதப்படுகிறது. SO2−3 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும் சல்பைட்டு அயனியின் செலீனியம் ஒத்த சேர்மம் செலீனைட்டாகும். பிரமிடு வகை கட்டமைப்பில் காணப்படும் செலீனைட்டின் ஆக்சிசனேற்ற எண் +4 ஆகும். செலீனைட்டு அயனியைக் கொண்டுள்ள சேர்மங்கள் செலீனைட்டுகள் எனப்படுகின்றன. உதாரணமாக செலீனைட்டு அயனியைக் கொண்டுள்ள சோடியம் சேர்மம் சோடியம் செலீனைட்டு என்று அழைக்கப்படுகிறது. (Na2SeO3) செலீனைட்டு அயனிக்கு சோடியம் செலீனைட்டு ஒரு பொதுவான மூலச்சேர்மமாகும்.[1] செலீனசு அமிலத்தின் எசுத்தர் உப்புகளும் செலீனைட்டுகள் எனப்படுகின்றன. இருமெத்தில் செலீனைட்டை (CH3)2SeO3.) இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

செலீனைட்டு கட்டமைப்பு
செலீனைட்டு மாதிரி
Mn, Fe(III), Ni, Co, Cu செலீனைட்டுகள்

தயாரிப்பு

தொகு

செலீனசு அமிலக் கரைசல்களை நடுநிலையாக்கம் செய்வதன் மூலம் செலீனைட்டு உப்புகளை தயாரிக்கலாம். செலீனியம் ஈராக்சைடை நீரில் கரைத்து செலீனசு அமிலக் கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். இச்செயல்முறை ஐதரசன் செலீனைட்டு (HSeO) அயனியை உருவாக்குவதன் வழியாக நிகழ்கிறது.

வினைகள்

தொகு

செலீனைட்டு தனிமநிலை கந்தகத்துடன் வினைபுரிந்து தயோசெலீனைட்டை கொடுக்கிறது.:[2]

SeO2−3 + S → SSeO2−3

பெரும்பாலான செலீனைட்டு உப்புகள் உலோக ஆக்சைடுடன் செலீனியம் டையாக்சடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் உருவாகின்றன.

Na2O + SeO2 → Na2SeO3

மேற்கோள்கள்

தொகு
  1. F. Fehér (1963). "Sodium Selenite (IV)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 1pages=431. NY,NY: Academic Press.
  2. Ball, Sheila; Milne, John (1995). "Studies on the Interaction of Selenite and Selenium with Sulfur Donors. Part 3. Sulfite". Canadian Journal of Chemistry 73 (5): 716–724. doi:10.1139/v95-091. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1995-05_73_5/page/716. 

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், செலீனைட்டு!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனைட்டு&oldid=3876478" இலிருந்து மீள்விக்கப்பட்டது