செலுவாம்பா மாளிகை

செலுவாம்பா மாளிகை (Cheluvamba Mansion) என்பது கர்நாடகாவின் மைசூர் நகரில் அமைந்துள்ளது. மைசூரின் மூன்றாவது இளவரசிக்காக மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையாரால் இது கட்டப்பட்டது. இது தோட்டங்களால் சூழப்பட்ட ஒரு பெரிய பகுதியில் பரவியிருக்கும் மற்ற மாளிகைகளைப் போன்றது. இந்த மாளிகை உடையார் வம்சத்தின் மற்ற கட்டிடங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. [1]

செலுவாம்பா மாளிகை
செலுவாம்பா மாளிகை
Map
பொதுவான தகவல்கள்
வகைமாளிகை
நகரம்மைசூர், கருநாடகம்
நாடுஇந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

அமைவிடம் தொகு

மைசூர் நகரத்தின் வடமேற்கு பகுதியில் மைசூர்- கிருட்டிணராச சாகர் சாலையில் மைசூர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் செலுவம்பா மாளிகை அமைந்துள்ளது. [2]

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தொகு

இப்போது இந்த மாளிகை நாட்டின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு 1948 திசம்பரில் முறையாக இந்த கட்டிடத்தை அதிகாரப்பூர்வமாக பெற்ற பிறகு இந்த மாளிகை பராமக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இது அக்டோபர் 21, 1950 அன்று திறக்கப்பட்டது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுவாம்பா_மாளிகை&oldid=3047173" இருந்து மீள்விக்கப்பட்டது