செல்ட்டிக் திடல்
செல்ட்டிக் திடல் (Celtic Park, செல்டிக் பூங்கா) இசுக்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் பார்க் எட் பகுதியில் உள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது செல்டிக் காற்பந்துக் கழகத்தின் தாயக மைதானமாகும். அனைவரும் அமரக்கூடிய இவ்வரங்கத்தின் கொள்ளளவு 60,355 பேராகும்.[4] செல்டிக் விளையாட்டரங்கம் இசுக்கொட்லாந்திலுள்ள விளையாட்டரங்குகளிலேயே மிகப்பெரியதாகவும் ஐக்கிய இராச்சியத்தில் மிகப்பெரிய விளையாட்டரங்குகளில் ஏழாவதாகவும் விளங்குகிறது. செல்டிக் இரசிகர்களால் பொதுவாக பார்க்கெட்[5] என்றோ பாரடைசு[6][7] என்றோ குறிப்பிடப்படுகிறது.
செல்ட்டிக் திடல் | |
---|---|
பார்க் எட் பாரடைசு | |
இடம் | செல்ட்டிக் வே பார்க் எட், கிளாஸ்கோ |
திறவு | 1892 |
சீர்படுத்தது | 1994–98 |
உரிமையாளர் | செல்ட்டிக் காற்பந்துக் கழகம் (1897–நடப்பு)[1] |
தரை | புல் (1892–நடப்பு) |
கட்டிட விலை | £35,000 (முதன்மை அரங்கம், 1929)[1] £40m (1994–98 மீளமைப்பு)[2] |
கட்டிடக்கலைஞர் | சங்கன் அன்ட் கெர் (முதன்மை அரங்கம், 1929)[1] பெர்சி சான்சன்-மார்சல் கூட்டாளிகள் (1994–98 மீளமைப்பு) |
குத்தகை அணி(கள்) | செல்ட்டிக் காற்பந்துக் கழகம் (1892–நடப்பு)[1][3] |
அமரக்கூடிய பேர் | 60,355[4] |
1887இல் நிறுவப்பட்ட செல்ட்டிக் காற்பந்துக் கழகம் 1988இல் தனக்கான விளையாட்டரங்கை பார்கெட் பகுதியில் அமைத்தது. 1892இல் வாடகைக் கட்டணம் உயர்ந்தமையால் கழகம் மாற்றிடத்திற்கு இடம் பெயர்ந்தது. புதிய இடத்தில் நீள்வட்ட வடிவில் விளையாட்டரங்கை கட்டமைத்தது. இங்கு சாதனை வருகைப் பதிவாக சனவரி 1, 1938இல் 83,500 பார்வையாளர்கள் உள்ளூர் கழகங்களுக்கிடையேயான போட்டியைக் காணக் கூடினர். 1957இலிருந்து 1971 வரையான காலத்தில் கூரை வேயப்பட்டது; ஒளிவெள்ள குழல்கள் நிறுவப்பட்டன. பழைய இருக்கைப்பீடங்கள் இடிக்கப்பட்டு முற்றிலும் புதிய, அனைவரும் அமரக்கூடிய, விளையாட்டரங்கம் ஆகத்து 1998இல் கட்டி முடிக்கப்பட்டது.
2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா இந்த அரங்கத்தில் நிகழ்ந்தேறவுள்ளது.[8][9]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Inglis 1996, ப. 432
- ↑ "Scotland A Squad". Scottish Football Association. http://www.scottishfa.co.uk/international_fixture_details.cfm?page=462&matchID=57944. பார்த்த நாள்: 14 November 2011.
- ↑ 4.0 4.1 "Celtic Football Club". www.spfl.co.uk. Scottish Professional Football League. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
- ↑ Swan, Craig (11 November 2011). "Former Celtic star urges Old Firm to sell stadium names to save clubs". Daily Record (Trinity Mirror). http://www.dailyrecord.co.uk/football/spl/2011/11/11/former-celtic-star-urges-old-firm-to-sell-stadium-names-to-save-clubs-86908-23553514/. பார்த்த நாள்: 11 November 2011.
- ↑ "Celtic spirit shines on". FIFA.com (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு) இம் மூலத்தில் இருந்து 14 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130314003722/http://www.fifa.com/classicfootball/clubs/club%3D31002/index.html. பார்த்த நாள்: 11 November 2011.
- ↑ "Celtic". Scottish Football Ground Guide. Duncan Adams. பார்க்கப்பட்ட நாள் 9 November 2011.
- ↑ "Scottish League Cup final: Celtic Park hosts Aberdeen v Inverness". BBC Sport. BBC. 5 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
- ↑ "Celtic Park to host 2013/2014 Scottish Cup final". BBC Sport. BBC. 30 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.