செல்வரா அருவி
செல்வரா அருவி (Chelavara Falls) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள விராசுபேட்டையில் அமைந்துள்ள இயற்கையான அருவி ஆகும். இது விராசுபேட்டை - தலைக்காவிரி மாநில நெடுஞ்சாலையில் (மா.நெ. 90) விராசுப்பேட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள செய்யண்டனே கிராமத்திற்கு அருகில் காவிரியின் துணை ஆற்றில் அமைந்துள்ளது.
இது கபே விடுமுறை தங்குமிடம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. குடகின் மிக உயரமான இடமான தடியாண்டமோலுக்கு அருகில் உள்ளது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து காட்டுக்குள் 200 மீட்டர் நடந்து சென்று அருவியினை அடையலாம்.
இது ஆபத்தான அருவி ஆகும். நீரின் அருகில் சென்றால் நீரோட்டம் உள்ளே இழுக்க வாய்ப்புள்ளது. இது சுமார் 100 அடி ஆழம் கொண்டது. எல்லா இடங்களிலும் ஆபத்து அறிகுறிகள் உள்ளன. தண்ணீரில் இறங்க வேண்டாம் என அப்பகுதியினர் அறிவுறுத்துகின்றனர். இங்கு சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chelavara Falls - Best waterfalls". Karnataka Tourism (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
- ↑ https://plus.google.com/103405638646464157965/about?gl=in&hl=en [தொடர்பிழந்த இணைப்பு]