செல்வி அபிராமி – வயது 11

செல்வி அபிராமி – வயது 11 யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் ஆகும். இக்குறுந்திரைப்படம் சிறுவர்களின் மீது நடத்தப்படும் முறைகேடுகள் மற்றும் அதன் பின்விளைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குறுந்திரைப்படத்தை இயக்கியவர் யோசித்தன் எனும் புனைபெயரைக் கொண்டுள்ள யே. ம. யோசப் என்பவராவார். முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உள் உணர்வுகள், வழங்கப்படும் சிகிச்சைகள் போன்றவற்றையும் முறைகேட்டில் ஈடுபட்டவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவருக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் இக்குறுந்திரைப்படம் விவரிக்கின்றது. இக்குறுந்திரைப்படத்தினை இயக்கிய யே.ம. யோசப் அப்பாவின் மிதிவண்டி எனும் குறுந்திரைப்படத்தின் பின்னர் தனது இரண்டாவது குறுந்திரைப்படமாக இதனை வெளியிட்டுள்ளார். வெறிநாய் என இக்குறும்படத்திற்கு தலைப்பிடப்பட்டு பின்னர் செல்வி அபிராமி – வயது 11 என தலைப்பு மாற்றப்பட்டது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வி_அபிராமி_–_வயது_11&oldid=3666288" இலிருந்து மீள்விக்கப்பட்டது