செவிலித் தாய்

மற்றொருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர்

செவிலித் தாய் (Wet nurse) என்பவர் மற்றொருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர் ஆவார்.[1] குழந்தையை பெற்றெடுத்த தாய் இறந்தாலோ அல்லது குழந்தைக்கு போதுமான முலைப்பால் சுரக்கவில்லை என்றாலோ அல்லது குழந்தைக்கு தாமே பாலூட்ட வேண்டாம் என தேர்வு செய்தாலோ செவிலித் தாய் பணியமர்த்தப்படுகிறார்கள். செவிலித் தாயிடம் பால் குடித்த குழந்தைகள் அனைவரும் பால்-உடன்பிறப்புகள் எனப்படுவர். சில பண்பாட்டில், செவிலித் தாயின் குடும்பத்தை, தங்களின் குடும்ப உறவுகளாக கருதுவர். இருபதாம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பால் தரும் செவிலித் தாய்கள் குறித்தான செய்திகள் காணக்கிடைக்கிறது.

பிரான்சின் பதினான்காம் லூயி கைக்குழந்தையாக இருந்த போது செவிலித் தாயிடம் பால் குடிக்கும் காட்சி

குழந்தைகளுக்கான தரமான பால் பொடிகளின் வரவாலும், தற்போது சில நாடுகளில் தாய்ப்பால் வங்கிகள்[2] செயல்படுவதாலும் 21ம் நூற்றாண்டில் செவிலித் தாய்களின் தேவை இல்லாமல் போனது. மேலும் பாலூட்டுவதற்கு சமீபத்தில் குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. தற்போது மார்பக நரம்புத் தூண்டுதல் மூலம் பாலூட்டல் வெளிப்படுத்தப்படுகிறது. சில பெண்கள் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கு மார்பக பம்பைப் பயன்படுத்தி பாலூட்டுதலை நிறுவ முடிகிறது.[3]

காரணங்கள்

தொகு

ஒரு தாயால் குழந்தைக்கு போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாமல் போவதாலும், மகப்பேற்றின் போது அல்லது மகப்பேற்றுக்கு சில காலத்திற்குப் பிறகு குழந்தையின் தாய் இறந்து போவதாலும் செவிலித் தாயின் தேவை அதிகாக இருந்தது.[4][5] பாலூட்டும் ஒரு பெண்னின் பால் குடிக்கும் குழந்தை இறந்துவிட்டால், அப்பெண்ணே மற்றவரின் குழந்தைக்கு செவிலித் தாயாக இருக்க வாய்ப்பு உள்ளது.[6]

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மேல்தட்டு பெண்கள் அழகு குறைந்து விடும் அல்லது பண்பாடாற்றச் செயல் எனக்கருதினர்.[7] மேலும் தாய்ப்பால் ஊட்டுவதால் நாகரீகமான உடைகளை அணிவதை தடுக்கிறது எனக்கருதினர். சில பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் நேரத்தைச் செலவழிக்கும் வேலைகளில் இருந்து தப்பிக்க முற்றிலும் செவிலித் தாயை பணியமர்த்துகின்றனர்.[8] ஒரு தாய் போதுமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாதபோது செவிலித் தாயைப் பயன்படுத்தினர்.

நாடுகள் வாரியாக செவிலித் தாய்கள்

தொகு

இந்தியா

தொகு

1500களில் முகலாயர் அரண்மனைகளில் துருக்கிய-மங்கோலியப் பெண்கள் அரண்மனை குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட செவிலித் தாய்மார்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்பட்டனர். செவிலித் தாயின் குடும்பத்தை, தங்களின் குடும்ப உறவுகளாக கருதினர். பேரரசர் அக்பரின் செவிலித் தாயான மகம் அங்கா இராஜமாதா என்ற மரியாதையுடன் நடத்தப்பட்டார்.[9]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய அதிகார வர்க்க குடும்பக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட ஆதிக்கச் சாதி பெண்களை மட்டும் பணியில் அமர்த்தினர். மற்ற சமூகத்து பெண்களை குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களாக பணியமர்த்தினர்.

ஐக்கிய இராச்சியம்

தொகு

ஐக்கிய இராச்சியத்தில் செல்வக் குடும்பக் குழந்தைகளைப் பராமரிக்கவும், பாலூட்டவும் செவிலித் தாய்களை நல்ல ஊதியத்தில் பணி அமர்த்தினர். சாதாரண ஆண் தொழிலாளர்களை விட செவிலித் தாய்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைத்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை, பெரும்பாலான செவிலித் தாய்மார்கள் மூன்று ஆண்டுகள் வரை, பராமரிப்பாளருடன் வாழ தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் அனுப்பப்பட்டனர்.[10] இதுபோன்று வாழ்ந்த செவிலித் தாய்மார்களின் 80% குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். [10] பிரித்தானியப் பேரரசி விக்டோரியா காலத்தில் செவிலித் தாய்கள் குறைந்த ஊதியத்தில் பிறரின் குழந்தைகளுக்கு பாலூட்டினார்கள். உயர்தர வகுப்புப் பெண்கள், தங்கள் வீட்டு வேலை செய்ய செவிலித் தாய்மார்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Wet nurse, wet-nurse, n". Oxford English Dictionary. December 1989. 
  2. Human milk bank
  3. Breast pump
  4. O'Reilly, Andrea, "Wet Nursing," Encyclopedia of Motherhood (2010): 1271
  5. Mrs Isabella Beeton (1861). Mrs Beeton's Book of Household Management (1st ed.). London: S. O. Beeton, 18 Bouverie Street, London EC. pp. 1022–1024.
  6. "Situations Vacant". The Age (Victoria, Australia): p. 8. 15 June 1897. https://trove.nla.gov.au/newspaper/article/190651591?searchTerm=%22wetnurse%22. 
  7. Emily E. Stevens, Thelma E. Patrick and Rita Pickler, "A History of Infant Feeding," Journal of Perinatal Education (Spring 2009): 32-39. (accessed 10 February 2016).
  8. O'Reilly, Andrea, "Wet Nursing," Encyclopedia of Motherhood (2010): 1271.
  9. Jackson, Guida M. (1999). Women rulers throughout the ages : an illustrated guide ([2nd rev., expanded and updated ed.]. ed.). Santa Barbara, Calif: ABC-CLIO. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576070918.
  10. 10.0 10.1 Wolf, Jacqueline H, "Wet Nursing", Encyclopedia of Children and Childhood in History and Society (2004).
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிலித்_தாய்&oldid=3675830" இலிருந்து மீள்விக்கப்பட்டது