செவெரசு சிநேப்

செவெரசு சிநேப் என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆவார். இவர்அ னைவரிலும் பார்க்க தனித்துவமான, திறமையான ஒரு மந்திரவாதி ஆவார். இவர் ஆக்வாட்சில் பேராசிரியராக கடமையாற்றும் போது, கதையின் கதாநாயகனாகிய ஆரிக்கு விரோதமாகவே செயற்படுகின்றார். இந்த விரோதம் சிநேப்பிற்கு ஆக்வாட்சில் மந்திரம் பயிலும் போது ஆரியின் தந்தையான ஜேம்சு பாட்டர் செய்த தொந்தரவு மற்றும் இடரினால் ஏற்பட்டது ஆகும். இவர் ஆக்வாட்சில் இருந்து வெளியேறிய பின் பிணந்தின்னிகளுடன் இணைந்து விடுகின்றார். பின் ஆரியின் தாயின் மீதுள்ள அன்பின் காரணமாக அல்பசு டம்பிள்டோருடன் சேர்ந்து ஆர்டர் ஆப் பீனிக்சில் இணைந்து இரண்டிற்கும் பொதுவாக இருந்து ஆரி பாட்டரை தொடர் முடியும் வரை பாதுகாக்கின்றார்.

செவெரசு சிநேப்
ஆரி பாட்டர் கதை மாந்தர்
முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
இறுதித் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) அலன் ரிக்மான் (வயது வந்த)
அலெக் கொபிங்சு (வாலிபம்)
பெனெடிக் கிளார்க் (சிறுவயது)
மிக் இக்னிசு (வாலிபம்)
இல்லம் சிலித்தரீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவெரசு_சிநேப்&oldid=2909650" இலிருந்து மீள்விக்கப்பட்டது