செ. பெருமாள்
செ. பெருமாள் (திசம்பர் 8, 1950 - சூலை 18, 2013) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக ஏற்காடு சட்டமன்றத்தின் உறுப்பினராக 3 முறை தெரிவு செய்யப்பட்டவர்.[1] 1989-91, 1991-96, 2011-2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு தமிழ்நாடு சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]
இவரின் தந்தை செம்மாக் கவுண்டர். சொந்த ஊர் பாப்பநாய்க்கன்பட்டி (ஆத்தூர் வட்டம்) ஆகும். தும்மல் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் அஞ்சல் துறையில் பணியில் இருந்தார். அப்பணியை துறந்துவிட்டு 1989ம் ஆண்டு அதிமுகவின் ஜெயலலிதா அணி சார்பாக ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கிழக்கு சேலம் மாவட்ட அதிமுகவின் துணை செயலாளராகவும் ஏற்காடு பகுதி அதிமுகவின் செயலாளராகவும் இருந்தார்.
2013, யூலை 18 அன்று மாரடைப்பு காரணமாக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.[3][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
- ↑ Yercaud MLA Perumal dead
- ↑ "ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மாரடைப்பால் மரணம்". Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
வெளி இணைப்புகள்
தொகு- Profile on Rajya Sabha website பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்