சேஃப்சிட்டி
சேப்சிட்டி.இன் (Safecity.in) என்றும் அழைக்கப்படும் சேப்சிட்டி, பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அநாமதேயமாக அறிக்கையிட அனுமதிக்கும் ஒரு இலவச இணையதளம் ஆகும், மேலும் எவரும் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வரைபடத்தை உருவாக்குகிறது. இது இந்தியா, கென்யா, கேமரூன், நேபாளம்,[1] மற்றும் மலேசியாவில் செயல்படுகிறது.[2]
ஜோதி சிங் (நிர்பயா என்றும் அழைக்கப்படுகிறார்) 2012 டெல்லி கும்பல் கற்பழிப்பு மற்றும் கொலைக்குப் பிறகு இந்த இணையதளம் ரெட் டாட் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டது.[3] பொது பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேம்பாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்மற்றும் வன்முறை பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட தரவை சேஃப்சிட்டி பயன்படுத்தியுள்ளது.
வளர்ச்சி
தொகு2012 டெல்லி கும்பல் கற்பழிப்பு மற்றும் கொலைக்குப் பிறகு (நிர்பயா என்றும் அழைக்கப்படுகிறது),[3] எல்சா மேரி டி சில்வா சூர்யா வேலமுரி, ஆதித்யா கபூர் மற்றும் சலோனி மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து இதனை அமைத்தார்,[4][5] இந்தியாவில் பொது பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அறிந்து கொள்வதற்காக இதனை உருவாக்கினர். அடுத்த பல ஆண்டுகளில், சேஃப்சிட்டி வளார்ச்சி கண்டது. தில்லி மும்பை, புனே, பாட்னா மற்றும் அகமதாபாத்,[6] ஆகிய நகரங்களில் பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உள்ளூர் சமூக குழுக்கள் பணியாற்றியுள்ளனர்.[7]
2015 ஆம் ஆண்டில், சேப்சிட்டி 6,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகளைச் சேகரித்தது, மேலும் டெல்லி, மும்பை மற்றும் கோவாவிலிருந்து அறிக்கைகளை கொத்துக்குறி அல்லது நேரடி செய்தி மூலம் பகிர்ந்து கொள்ள வசதியாக டுவிட்டர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியது.[8]
2016 ஆம் ஆண்டில், சேஃப்சிட்டி சேகரித்த தரவு, பொது கழிப்பறைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறிப்பாக ஆபத்தானது என்றும் , அதில் மோசமான விளக்குகள் மற்றும் பராமரிப்பு, மற்றும் பார்வையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு பதில் நடவடிக்கை எடுக்கத் தவறியது உட்பட அரசின் பல நடவடிக்கைகளை கூறியது.[9] பொதுக் கழிப்பறைகளில் கதவுகளைச் சேர்ப்பது உட்பட, அதிகரித்த பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க சமூக உறுப்பினர்கள் சேப்சிட்டியின் தரவைப் பயன்படுத்தினர். காவல்துறையினர் ரோந்துப் பணியை அதிகரிக்க முடிந்தது மற்றும் விளக்கு போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் மீளாய்வு செய்யப்பட்டன. டி'சில்வாவின் கூற்றுப்படி, தரவு இந்த இணையதளம் செயலாக்கத்தை ஆதரிக்கிறது, ஏனென்றால் "நீங்கள் அதை கண்காணிக்கலாம், போக்குகளை தீர்மானிக்கலாம் மற்றும் உள்ளூர் அளவில் ஒரு கட்டமைக்கப்பட்ட வழியில் அதனைப் பயன்படுத்தலாம், மேலும் மக்கள் தங்கள் சொந்த சுற்றுப்புறத்தின் உரிமையை கோரும் போது அவர்கள் பெரிய பிரச்சினைகளை தீர்க்க அதிகாரம் பெற்றதாக உணர்கிறார்கள் " என்று கூறினார்.[6]
2017 ஆம் ஆண்டில், பாதுகாப்புத் தரவு டி'சில்வாவால் இணைந்து எழுதப்பட்ட ஒரு வழக்கு ஆய்வில் இணைக்கப்பட்டு, குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு இதழின் சிறப்பு இதழில் வெளியிடப்பட்டது.[10] 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த இணையதளம் 10,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகளைப் பெற்றுள்ளது.[11]
2021 வாக்கில், இந்த தளம் 25,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகளை சேகரித்தது.[12] ஏப்ரல் 2021 இல், தெருத் துன்புறுத்தலுக்கு எதிராக பார்வையாளர்களை ஊக்குவிப்பதற்காக #தகல்டோ பிரச்சாரத்தை சேஃப்சிட்டி நடத்தியது.[12][13]
சான்றுகள்
தொகு- ↑ Weiser, Sonia (October 12, 2018). "Sexual-Harassment-Reporting Apps Help Stop Abuse in Global City Streets". New York Magazine. https://nymag.com/developing/2018/10/safecity-walkfreely-ushahidi-sexual-harassment-abuse-reporting-maps.html.
- ↑ Teoh, Ming (December 7, 2020). "App to keep women safe from sexual harassment launched in Malaysia". The Star. https://www.thestar.com.my/lifestyle/family/2020/12/07/app-solutely-safe-in-the-city.
- ↑ 3.0 3.1 Jayakumar, P. B. (October 8, 2017). "Bedrock of Safety: The 'Nirbhaya' incident was the trigger that made D'Silva take up women's issues". Business Today. https://www.businesstoday.in/magazine/features/elsa-marie-dsilva-founder-and-chief-executive-red-dot-foundation-safecity-internet-platform-womens-safety/story/260399.html.
- ↑ Maitreyee (January 1, 2013). "How safe is your city? Log in to safecity.in". OneIndia. https://www.oneindia.com/2013/01/01/how-safe-is-your-city-log-in-to-safecity-in-1123518.html.
- ↑ Jogani, Aashna (January 25, 2014). "Meet the faces behind Safecity.in". DNA India. https://www.dnaindia.com/lifestyle/report-meet-the-faces-behind-safecityin-1955844.
- ↑ 6.0 6.1 .
- ↑ Borpujari, Priyanka (December 12, 2016). "Panic button: how can safety apps for women curb sexual assaults in India?". The Guardian. https://www.theguardian.com/world/2016/dec/12/india-sexual-assault-women-safety-apps.
- ↑ Narayanan, Jayashree (November 10, 2015). "Towards creating safer cities". Deccan Herald. https://www.deccanherald.com/content/511189/towards-creating-safer-cities.html.
- ↑ Amritat (November 23, 2016). "Not Possible to Rank Cities on Safety for Women: Elsa Marie D’Silva". SheThePeople.TV. https://www.shethepeople.tv/news/not-possible-to-rank-cities-on-safety-for-women-elsa-marie-dsilva/.
- ↑ Ceccato, Vania (2017). "Women’s victimisation and safety in transit environments". Crime Prevention and Community Safety 19: 163–167. doi:10.1057/s41300-017-0024-5. https://link.springer.com/article/10.1057/s41300-017-0024-5. பார்த்த நாள்: 25 March 2021.
- ↑ . October 12, 2018.
- ↑ 12.0 12.1 Kalanidhi, Manju Latha (June 6, 2021). "Concerned about women safety? Here's how you can warn ladies about harassers in your city by 'pinning the creep'". The New Indian Express. https://www.newindianexpress.com/magazine/2021/jun/06/concerned-about-women-safety-heres-how-you-can-warn-ladies-about-harassers-in-your-city-by-pinning-the-creep-2311366.html.
- ↑ India TV Tech Desk (March 26, 2021). "Bumble partners with Safecity to offer a safer internet". India TV. https://www.indiatvnews.com/technology/news-bumble-partners-with-safecity-to-offer-a-safer-internet-693635.