சேச யோகியார் ஞான ஏற்றம்

சேச யோகியார் ஞான ஏற்றம் என்பது சித்தர் பாடல்கள் நூல் தொகுப்பில் 13-வது நூலாக அமைந்துள்ளது. [1] இதில் 139 அடிகள் உள்ளன. இயற்றியவர் சேஷ யோகியார்.

உழவர் பாடும் பாட்டில் எண்ணிக்கை மட்டுமே வரும்.
இவரது பாடல்களில் ஞானக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அதனால் இதற்கு ஞான ஏற்றம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது களைப்பு தோன்றாமல் இருக்கப் பாடும் பாட்டு ஏற்றப் பாட்டு.
இதில் எத்தனையாவது சால் இறைக்கிறோம் என்னும் எண்ணிக்கையும் அடியாக வரும்.

எடுத்துக்காட்டு

தொகு
 
கரு மையம்
பிள்ளையாரும் வாரி
பிள்ளையாரும் அங்கே
பெருத்த மூலாதாரம்
சிறுத்த இதழ் நாலாம்
உரைத்த கம்பம் ஆகி
ஓங்கி உச்சி தொட்டுத்
தாங்கியதன் கீழாய்த்
தான் இரண்டதாகித்
தங்கி வாயு ஆனால்
அங்குமே கடந்து
சங்கிலி பிளந்து
சமத்த வாயு ஆனால்
இங்கிது உரைத்தே
இரண்டுடனே வாரி

நம் உடல் உணர்வுகளின் மூலாதாரம் பிள்ளையார். அந்தப் பிள்ளையாராகிய மூலாதாரமே நமக்கு வருவாய். அது நான்கு இதழ்களைக் கொண்ட தாமரை. அதில் உச்சி வரையில் ஓங்கியிருக்கும் ஒரு கம்பம். கீழே காற்று உந்துவதால் மூலாதார ஆற்றல் இரண்டாகப் பிரிந்து செல்லும். பிரிந்து செல்வது சங்கிலி போல் இருக்கும்.
இனி இரண்டாவது செயல்
இப்படி இதன் ஞானம் விரிந்து செல்கிறது

மூலாதாரம் என்பது கருமையம். கரு உண்டாகும் மையமே கருமையம்.

மேற்கோள்

தொகு
  1. சித்தர் பாடல்கள், சேஷ யோகியார், ஞான ஏற்றம், (ஏற்றப் பாட்டு), நூல் பக்கம் 275
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேச_யோகியார்_ஞான_ஏற்றம்&oldid=2729046" இலிருந்து மீள்விக்கப்பட்டது