சேடி அலெக்சாண்டர்

மனித உரிமைகள் ஆர்வலர்

சேடி டேனர் மோசெல் அலெக்சாண்டர் (Sadie Tanner Mossell Alexander) (ஜனவரி 2,1898-நவம்பர் 1,1989) 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை செயல்பாட்டிலிருந்த ஓர் முன்னோடி கறுப்பின தொழில்முறை மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஆவார். 1921 ஆம் ஆண்டில், மோசெல் அலெக்சாண்டர் முனைவர்பட்டம் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணாவார். 1927 ஆம் ஆண்டில், பென்சில்வேனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் சட்டப் பட்டம் பெற்ற முதல் கறுப்பினப் பெண்மணி எனவும் மாநிலத்தில் சட்டப் பயிற்சி பெற்ற முதல் கறுப்பு பெண்மணியும் ஆனார். டெல்டா சிக்மா தீட்டா சொராரிட்டி எனற ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தின் முதல் தேசியத் தலைவராகவும் இருந்தார். அந்த அமைப்பில் 1919 முதல் 1923 வரை பணியாற்றினார்.[1]

சேடி அலெக்சாண்டர்
முனைவர் பட்டம் பெறும்போது எடுக்கப்பட்டப் புகைப்படம்
பிறப்புசேடி டேனர் மோசெல்
(1898-01-02)சனவரி 2, 1898
பிலடெல்பியா, அமெரிக்கா
இறப்புநவம்பர் 1, 1989(1989-11-01) (அகவை 91)
பிலடெல்பியா, அமெரிக்கா
கல்விபென்சில்வேனியா பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை, முனைவர், இளங்கலைச் சட்டம்)
பெற்றோர்ஆரோன் ஆல்பல்ட்டு மோசெல் II (தந்தை)
மேரி லூயிஸ் டேனர் (தாயார்)
வாழ்க்கைத்
துணை
இரேமண்ட் பேப் அலெக்சாண்டர் (தி. 1923)
பிள்ளைகள்2

மோசெல் அலெக்சாண்டரும் இவரது கணவரும் பிலடெல்பியாவிலும் தேசிய அளவிலும் மனித உரிமைகளில் தீவிரமாக இருந்தனர். 1946 ஆம் ஆண்டில் ஹாரி எஸ். ட்ரூமனால் நிறுவப்பட்ட குடியியல் உரிமைகள் தொடர்பான குடியரசுத் தலைவரின் குழுவில் இவர் நியமிக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டில் நகரின் மனித உறவுகள் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டார். 1968 வரை அதில் பணியாற்றினார். சட்டத்தின் கீழ் உள்ள மனித உரிமைகளுக்கான தேசிய வழக்கறிஞர்கள் குழுவின் நிறுவன உறுப்பினராக இருந்தார் (1963). தேசிய நகர்ப்புற அமைப்புக் குழுவில் 25 ஆண்டுகள் பணியாற்றினார். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் 1979 ஆம் ஆண்டு முதுமை பற்றிய வெள்ளை மாளிகை மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக இவரை நியமித்தார். பின்னர் ரானல்ட் ரேகனின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலாளரான ரிச்சர்ட் ஸ்வீக்கரால் இந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டது..[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sadie T. M. Alexander, 91, dies; lawyer and civil rights advocate". November 3, 1989. பார்க்கப்பட்ட நாள் August 17, 2014.
  2. "A lively leader for the WHCoA" (in en). Geriatric Nursing 2 (3): 233–234. May 1, 1981. doi:10.1016/S0197-4572(81)80093-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-4572. 

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேடி_அலெக்சாண்டர்&oldid=4108100" இலிருந்து மீள்விக்கப்பட்டது