சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு

சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு (Sandy Hook Elementary School Shooting) என்பது 2012, திசம்பர் 14ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க நாட்டின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரில் அமைந்துள்ள சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் 20 பள்ளிச் சிறார்களும் 6 பள்ளி அலுவலர்களும் உட்பட 27 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட நிகழ்ச்சியைக் குறிக்கிறது.[1]

Sandy Hook Elementary School Shooting
சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு
நியூட்டன் நகர் இருக்கும் இடம்
ஃபேர்ஃபீல்ட் வட்டம், கனெடிகட் மாநிலம், ஐ.அ.நா.
இடம்டிக்கின்சன் ட்ரைவ்,
சேண்டி ஹூக், கனெடிகட், ஐ.அ.நா.
ஆள்கூறுகள்41°25′12″N 73°16′43″W / 41.42000°N 73.27861°W / 41.42000; -73.27861
நாள்திசம்பர் 14, 2012 (2012-12-14)
9:35 a.m. to 9:39 a.m.; 9:49 a.m.[சான்று தேவை] (EST)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
சேண்டி ஹூக் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும்
தாக்குதல்
வகை
பள்ளி துப்பாக்கிச் சூடு, கொலை-தற்கொலை, தாய்க் கொலை, கும்பல் கொலை
ஆயுதம்பள்ளிக்கூடத்தில் கண்டெடுக்கப்பட்டவை நான்கு:
  • .223 பகுதி-தானியங்கி தோள்துப்பாக்கி
  • 9மி.மீ. க்ளோக் கைத்துப்பாக்கி
  • 9மி.மீ SIG சாவர் கைத்துப்பாக்கி
  • நான்காம் ஆயுதம் கொலையாளியின் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்டது. "நீண்ட துப்பாக்கி"
  • இறப்பு(கள்)28 (கொலையாளி உட்பட)
    காயமடைந்தோர்1+
    தாக்கியோர்ஆதாம் பீட்டர் லான்சா

    ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவரும் அலுவலர்களும் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டாவது இதுவே. இதற்கு முன் 2007ஆம் ஆண்டில் விர்ஜீனியா மாநிலத்தில் விர்ஜீனியா டெக் கல்வி நிறுவனத்தில் சூடு நிகழ்ந்தது.

    சூடு நடத்தியவர்

    தொகு

    சூடு நடத்தியவர் 20 வயது நிரம்பிய ஆதாம் லான்சா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆதாம் முதலில் தன் தாயாகிய நேன்சி லான்சா என்பவரை வீட்டில் சுட்டுக் கொன்றார். அதன் பின் அவர் சேண்டி ஹூக் பள்ளிக்கூடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று, அங்கே பள்ளி அலுவலர்களையும் பள்ளிச் சிறார்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

    கொலையாளி உட்பட மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 28.

     
    கருப்பு: கொலையாளியின் வீடு;
    சிவப்பு: துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய இடம்
    பலியானோர்
    • Nancy Lanza, 52, perpetrator's mother
    • Rachel Davino, 29, teacher
    • Dawn Lafferty Hochsprung, 47, principal
    • Anne Marie Murphy, 52, teacher
    • Lauren Rousseau, 30, teacher
    • Mary Sherlach, 56, school psychologist
    • Victoria Soto, 27, teacher
    • Charlotte Bacon, 6
    • Daniel Barden, 7
    • Olivia Engel, 6
    • Josephine Gay, 7
    • Dylan Hockley, 6
    • Madeline F. Hsu, 6
    • Catherine Violet Hubbard, 6
    • Chase Kowalski, 7
    • Jesse Lewis, 6
    • Ana Marquez-Greene, 6
    • James Mattioli, 6
    • Grace McDonnell, 6
    • Emilie Parker, 6
    • Jack Pinto, 6
    • Noah Pozner, 6
    • Caroline Previdi, 6
    • Jessica Rekos, 6
    • Avielle Richman, 6
    • Benjamin Wheeler, 6
    • Allison N. Wyatt, 6
    சூடு நடத்தியவர் (தற்கொலை)
    • Adam Lanza, 20
    அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூடு நடந்த நாளில் வருத்தம் தெரிவிக்கிறார்.


    வெளி இணைப்புகள்

    தொகு


    Live coverage:

    ஆதாரங்கள்

    தொகு
    1. துப்பாக்கிச் சூடு - சேண்டி ஹூக் பள்ளிக்கூடம்