சேதுபதி மேல்நிலைப் பள்ளி

சேதுபதி மேல்நிலைப் பள்ளி மதுரை மாநகராட்சிப் பகுதியில் வடக்கு வெளி வீதியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றான இப்பள்ளி மதுரைக் கல்லூரி வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

சேதுபதி மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
மதுரை, தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1889
பள்ளி மாவட்டம்மதுரை
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

இப்பள்ளி 1889 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமையுடையது. அவரது நினைவாக பள்ளி நுழைவாயிலில் அவருடைய சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 1700 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். கல்வி சேவையில் 125 ஆண்டுகளை முடிக்க உள்ளது. செப்டம்பர் 12 மற்றும் டிசம்பர் 11 ஆகிய நாட்களில் ஆண்டு தோறும், பாரதியாரின் நினைவு மற்றும் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுகிறது.