சேது பந்தனம்

சேது பந்தனம் அல்லது சேது பந்தன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ரெங்காச்சாரி, நாட் அண்ணாஜிராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சேது பந்தனம்
இயக்கம்ஆர். பத்மநாபன்
தயாரிப்புஓரியண்டல் பிலிம்ஸ்
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புபி. பி. ரெங்காச்சாரி
நாட் அண்ணாஜிராவ்
எம். டி. பார்த்தசாரதி
குலத்து மணி
எம். ஆர். சுப்பிரமணியம்
எம். எஸ். மோகனாம்பாள்
டி. கே. கண்ணம்மாள்
அங்கமுத்து
எம். ஏ. சாண்டோ
வெளியீடுஜூலை 10, 1937
நீளம்14880 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத் திரைப்படம் ஆர். பத்மநாபனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படங்களில் ஒன்று. இராமாயணத்தின் ஒரு பகுதி இப்படத்தின் கதை. அனுமானால் (எம்.டி.பார்த்தசாரதி) இலங்கை எரியூட்டப்பட்ட நிகழ்வில் இருந்து கதை ஆரம்பிக்கின்றது. இலங்கையை எரித்தப் பின்னர் சீதையின் மோதிரத்துடன் ராமனிடம் (நாட் அண்ணாஜிராவ்) வருகிறான். பி. பி. ரெங்காச்சாரி இராவணனாக நடிக்க, ராவணனின் மனைவி மண்டோதரியாக எம். எஸ். மோகனாம்பாள் நடித்திருந்தார்.

சிதம்பரம் வைத்தியநாத சர்மாவின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (26 செப்டம்பர் 2010). "Sethu Bandhanam 1937". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/sethu-bandhanam-1937/article795290.ece. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_பந்தனம்&oldid=2124821" இருந்து மீள்விக்கப்பட்டது