சேத்துப்பட்டு பசுமை பூங்கா
சேத்துப்பட்டு பசுமை பூங்கா (ஆங்கில மொழி: Chetpet Eco Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.
சேத்துப்பட்டு பசுமை பூங்கா | |
---|---|
சேத்துப்பட்டு ஏரி பூங்கா | |
வகை | பூங்கா |
அமைவிடம் | சேத்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 13°04′37″N 80°14′28″E / 13.0769°N 80.2411°E |
உருவாக்கம் | 2016ஆம் ஆண்டு |
மேலாண்மை | தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம் |
வருகையாளர்கள் | 800 |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
சென்னை மாவட்டத்தின் சேத்துப்பட்டு புறநகர்ப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்காவின்[1] புவியியல் ஆள்கூறுகள் 13°04′37″N 80°14′28″E / 13.0769°N 80.2411°E ஆகும்.
இப்பூங்காவில், வண்ண மீன்கள் விதவிதமாக காட்சிப்படுத்தப்பட்ட மீன்காட்சியகம், சிறுவர்கள் விளையாட்டுத் திடல், திறந்த வெளி அரங்கங்கள், நீர் சாகச விளையாட்டுகள், தூண்டில் மீன்பிடிப்பு வசதிகள், படகுகள் பல கொண்ட படகு சவாரி மேற்கொள்ள படகுத் துறை, நடைப்பயிற்சி பாதைகள், உணவகங்கள், அழகிய மற்றும் அரிய வகை மரங்கள், கழிப்பறை போன்ற வசதிகள் காணப்படுகின்றன.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "களையிழந்த சேத்துப்பட்டு பசுமை பூங்கா..என்ன காரணம்?". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
- ↑ தினத்தந்தி (2018-01-29). "சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் வனம், ஆழ்கடல் திகில் காட்சி அரங்கம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
- ↑ "சேத்துப்பட்டு ஏரியில் ரூ.42 கோடியில் பசுமை பூங்கா: ஜெயலலிதா திறந்து வைத்தார்". Hindu Tamil Thisai. 2016-02-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.