சேந்தங்குடி ஜமீன்
'சேந்தங்குடி ஜமீன்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதி தானாண்மை நாடு அல்லது தானவ நாடு என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது வணங்காமுடி வழுவாட்டிதேவர் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது[1].
சேந்தங்குடி, நகரம், கீரமங்கலம், குலமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பதினெட்டுப்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது சேந்தங்குடி ஜமீனாகும்.[2][3]
வரலாறு
தொகு1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத அருணாசல வணங்காமுடி வழுவாட்டிதேவர் கீழ் 9 கிராமங்கள் இருந்தன (8631 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 2046 ரூபாய் 10 அணா 2 பைசா ஆகும்.[1][4]
தஞ்சைக் ஈசநாட்டு கள்ளர் பிரிவைச் சேர்ந்த வழுவாட்டித் தேவர், சேர்வை போன்ற பட்டப்பெயர்களை உடைய நிலக்கிழார்கள் வாழும்படியான பதினெட்டுக் கிராமங்களை உள்ளடக்கிய தானாண்மை நாடு பகுதியில் மொய் விருந்து விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுவது தனி சிறப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.[5]
புதுக்கோட்டை மாவட்டம், "ஆலங்குடி " பகுதி அம்புக்கோவில் (முற்கால அழும்பில்) ஊரில் உள்ள கல்வெட்டில் தானவனாட்டு பற்றி குறிப்பிடப்படுகின்றது. அந்த கல்வெட்டு வரிகளாக 'சோபகிருது வருஷூ இராச இராசவள நாட்டுப் பன்றி சூழ் நாட்டு அழிம்பிநாயினார் யிராசேந்திர சோளீசுரமுடைய நாயனாற்குத்தானவ னாட்டு நெடுவாசல் சீமைக்குக் கறுத்தாவான பாண்டிய பெருமாளான மாவுலி வாணாதிராயர் மக்களில் திருமேனியழகியரான குலசேகரக் காலிங்கராயரும் பழைய வனப்பெருமாளான சீவலக்காலிங்கிராயரும் செந்தாமரைகண்ணரும் இம்மூவருமோம் வீரராசேந்திர சோளீசுரமுடை ய நாயனாற்குத் திருனாமத்துக்காணி ஆக விட்ட நிலம்வதுக் கண்டியூர் வயல் கீழைவயலில் செட்டியள் ஒண்டி உறை" என்று உள்ளது.[6]
தற்போதைய சேந்தங்குடி ஜமீன்தார் ராஜேந்தி சேதுபதி வணங்காமுடி வழுவாட்டிதேவர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. [1].
- ↑ Sivaji Ganesan Biography.
- ↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (முதல் தொகுதி).
- ↑ மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. [2].
- ↑ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் : நாட்டுப்புறவியல், கலை & பண்பாடு.
- ↑ South Indian Inscriptions Vol 34.