சேந்தன்
சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர்.
சேந்தன் என்னும் சொல் 'சேயோன்' [1] என்னும் முருகனைக் குறிக்கும்.
அவர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் நிரலடைவை இங்குக் காணலாம்.
நிரலடைவு
தொகுவரிசை எண் | பெயர் | ஊர் / உறவு | குறிப்பு | காலம் / நூற்றாண்டு |
---|---|---|---|---|
1 | சேந்தன் | சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன் | அழிசி என்பவனின் மகன் [2] | சங்ககாலம் |
2 | பூதஞ்சேந்தனார் | புலவர் | இனியவை நாற்பது பாடியவர் | 7 |
3 | செழியன் சேந்தன் | பாண்டிய மன்னன் நெடுமாறனின் தந்தை | மண்மகளை மறுக்கடிந்த சேந்தன் [3] | 625-640 |
4 | அம்பர் சேந்தன் | அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் [4] | திவாகர நிகண்டு பாடிய திவாகர முனிவருக்கு இன்னமுது ஊட்டியவன் [5] | 850-880 |
5 | செப்புறை சேந்தன் | செப்புறை என்னும் ஊரிலிருந்த வள்ளல் | நம்பியாண்டார் நம்பி திருப்பல்லாண்டு நூலில் குறிப்பிடப்படுபவன் | 950 |
6 | நேந்தன் | 'பொன்பற்றி' எனப்பட்ட பொன்பரப்பி காவலன் | [[பெருந்தேவனார் (வீரசோழிய உரையாசிரியர்)|வீரசோழிய உரையாசிரியர்களைப் போற்றியவன் | 11 |
7 | சேந்தன் தூமான் | 'தமிழின் கிழவன்' எனப் போற்றப்படும் வள்ளல் | சூளாமணி பாடிய தோலாமொழித் தேவரைப் பேணியவன் | 11 |
8 | கூத்தப் பெருஞ்சேந்தன் | - | சேனாவரையர் தொல்காப்பிய எச்சவியல் உரையில் வரும் மேற்கோள் பாடலில் குறிப்பிடப்படுபவன் | 13 |
9 | நாங்கூர்ச் சேந்தன் | நாங்கூர் வள்ளல் | பட்டினத்தாரைச் சிறையிலிட்டவன். [6] | 14 |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
அடிக்குறிப்பு
தொகு- ↑ சேயோன் மேய மைவரை உலகம் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 5)
- ↑
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190) - ↑ வேள்விக்குடிச் செப்பேடு
- ↑ அம்பர் என்னும் ஊர் நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அண்மையில் உள்ளதோர் ஊர்
- ↑ சேந்தன் திவாகரம் நூலில் 19 இடங்களில் இந்தக் குறிப்பு வருகிறது
- ↑ 'மத்தளை தயிர்' எனத்தொடங்கும் பட்டினத்தார் பாடல்