சேம்சு ஆலிசன்

சேம்சு பாற்றிக்கு ஆலிசன் (James Patrick Allison, பிறப்பு: ஆகத்து 7, 1948) அமெரிக்க நோய் எதிர்ப்பாற்றலியலாளரும் 2018 ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியல் நோபல் பரிசாளரும் ஆவார். இவர் எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவத்தில் பேராசிரியராகவும் நோய் எதிற்பாற்றலியல் துறையின் தலைவராகவும், அதே நிறுவனத்தின் நோய் எதிர்ப்பாற்றலிய மருத்துவத் தளத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கின்றார்.

சேம்சு பாற்றிக்கு ஆலிசன்
(James P. Allison)
James P. Allison (2015).JPG
2015 இல் சேம்சு பாற்றிக்கு ஆலிசன்
பிறப்புJames Patrick Allison[1]
ஆகத்து 7, 1948 (1948-08-07) (அகவை 72)
ஆலிசு, டெக்சசு
வாழிடம்இயூசுட்டன், டெக்சசு, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைநோயெதிர்ப்பியல்
பணியிடங்கள்எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவம்
கார்ணெல் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கல்வி கற்ற இடங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
ஆய்வு நெறியாளர்கி. பேரி கிட்டோ
அறியப்படுவதுபுற்றுநோய் எதிர்ப்பாற்றல் ஆய்வு
விருதுகள்பல்சான் பரிசு (2017)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2018)
துணைவர்பத்மனி சர்மா, எம்டி, முனைவர்[2]

இவருடைய கண்டுபிடிப்புகளால் மிகவும் கடுமையான புற்றுநோய் வகைகளுக்குப் புதிய மருத்துவத் தீர்வுகள் கிடைத்துள்ளன. இவர் புற்றுநோய் ஆய்வு நடுவம் (Cancer Research Institute, (CRI)) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். டி-உயிரணு (T-cell) என்பதன் வளர்ச்சியிலும், அதன் இயக்கத்திலும் நெடுங்காலமாக ஆர்வம் கொண்டிருந்தார்.புற்றுநோய்க் கட்டிகளுக்குத் தீர்வாக உடலின் நோய் எதிர்ப்பாற்றலியல் அடிப்படையிலான மருத்துவத் தீர்வு முறைகளை வளர்த்தெடுத்தார். டி-உயிரணு எதிர்ப்புப்பொருள் உணரிப் புரதத்தை இவர்தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார். [3] 2014 இல் உயிரிய மருந்தியல் துறைக்கான சீனாவின் தாங்கு பரிசும், 2018 இல் மருத்துவம் அல்லது உடலியங்கியல் பிரிவுக்கான நோபல் பரிசும் சப்பானியர் தசுக்கு ஓஞ்சோவுடன் இணைந்து பெற்றார்.[4][5]

இளமை வாழ்க்கைதொகு

சேம்சு ஆலிசன் ஆகத்து மாதம் 7 ஆம் நாள் 1948 இல் அமெரிக்காவில் தெக்குசாசு மாநிலத்தில் ஆலிசு (Alice) என்னுமிடத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர்களாகிய தாய் கான்சிட்டன்சு கலுலா (இலின், Lynn) அவர்களுக்கும் தந்தை ஆல்பெர்ட்டு மர்ஃபி ஆலிசன் என்பாருக்கும் பிறந்த மூன்று மகன்களில் சேம்சு கடைசியாகப் பிறந்தார்[1]. இவருடைய 8 ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியரின் தூண்டுதலால் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டு தொடர்ந்தார்[6] ஆலிசன் ஆசுட்டினில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1969 இல் பெற்றார், அதன் பின்னர் இவர் அதே பல்கலைக்கழகத்தில் 1973 இல் உயிரியல் துறையில் சி. பேரி கிட்டோ என்பாரின் நெறியாள்கையில் முனைவர்ப் பட்டம் பெற்றார்[சான்று தேவை]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

ஆலிசன், எம்.டி ஆண்டர்சன் நிறுவனத்தின் உடன் பணியாளர் பதுமினி சர்மாவை மணந்துள்ளார். ஆலிசனுக்கு அகவை பதினொன்றிருக்கையில் அவருடைய தாயார் இலிம்ஃபோமா என்னும் புற்றுநோயால் இறந்தார். இவருடைய உடன்பிறந்தார் 2005 இல் ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோயால் இறந்தார். இவர் ஆர்மோனிக்கா என்னும் இசைக்கருவியை ஓர் இசைக்குழுவுக்காக வாசிக்கின்றார்[2]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_ஆலிசன்&oldid=2707888" இருந்து மீள்விக்கப்பட்டது