சேருவிலை தேர்தல் தொகுதி

(சேருவில தேர்தல் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேருவிலை தேர்தல் தொகுதி (Seruvila Electorate) என்பது சூலை 1977 முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் சேருவிலை பிரதேசத்தை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் சேருவிலை தேர்தல் தொகுதி திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1977 நாடாளுமன்றத் தேர்தல் தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எச். டி. எல். லீலாரத்ன யானை 14,926 57.55%
பிரேமதாச உடகமை கை 10,567 40.74%
பாண்டிசு எட்டிகேவால் சாவி 392 1.51%
விக்டர் பெரேரா சில்லு 52 0.20%
தகுதியான வாக்குகள் 25,937 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 112
மொத்த வாக்குக 26,049
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,250
வாக்குவீதம் 83.36%

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு