சைகா கோகர்

பழங்குடியினத் தலைவர்

சைகா கோகர் (Shaikha Khokhar) பஞ்சாபின் போதோகர் பீடபூமியை பூர்வீகமாகக் கொண்ட கோகர் பழங்குடியினத்,[1] தலைவராவார். இவர் தனது சகோதரர் நுஸ்ரத் கோகரின் மரணத்திற்குப் பிறகு அரியணையைப் பெற்றார். இவரது சகோதரர் நுஸ்ரத் கோகர் இலாகூரின் ஆளுநராகவும், கோகர் பழங்குடியினர் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். தைமூர் இலாகூரைத் தாக்கி, நுஸ்ரத்தின் அரண்மனையை எரித்து, அவரைக் கொன்றார். இவர் தனது சகோதரனைக் கொன்றதற்காக தைமூரைப் பழிவாங்க விரும்பினார். எனவே முக்கியமாக பழங்குடியினர் மற்றும் கோகர் அல்லாத சாமர்கள் போன்றவர்கள் அடங்கிய ஒரு பெரிய படையை திரட்டினார் இலாகூர் அருகே தைமூருக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டு கோகா கொல்லப்பட்டார்.

சைகா கோகர்
கோகர் பழங்குடியினத் தலைவர்
ஆட்சிக்காலம்கி.பி.1394-1420
முன்னையவர்நுசரத் கோகர் (சகோதரர்)
பின்னையவர்ஜஸ்ரத் கோகர் (மகன்)
பெயர்கள்
முஸ்தபா சைகா கோகர்
அரசமரபுகோகர்
மதம்இசுலாம்

மேற்கோள்கள்

தொகு
  1. (Sadhvi.), Kanakaprabhā (1989). Amarita barasā Arāvalī meṃ. darśa Sāhitya Sagha. p. 381. Archived from the original on 18 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைகா_கோகர்&oldid=3834400" இலிருந்து மீள்விக்கப்பட்டது